ஐசியூ க்கு யார் வந்தாலும் எல்லோருக்குமே ஒரே சட்டம் தான் - எல்லோருமே வாய் வழியாக உணவு உட்கொள்ளும் போது ஜெயலலிதா மட்டும் வேறு வழியில் சாப்பிடுகிறாரா ?

சென்னை நந்தனம் அப்பல்லோ மருத்துவமனையில் ஐ.சி.யுவில் சிகிட்சைப் பெற்றுவரும் தினத்தந்தி நாளிதழ் உரிமையாளர்

சிவந்தி ஆதித்தனை பார்க்க சென்ற முதல்வர் ஜெயலலிதாவிடம் மருத்துவ காரணங்களால் செருப்பை கழற்றச் சொன்ன 70 வயது மூத்த மருத்துவர் சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளார்.

தமிழக தலைநகர் சென்னையில் இருக்கும் நந்தனம் அப்பல்லோ மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் தினத்தந்தி நாளிதழின் உரிமையாளர் சிவந்தி ஆதித்தனை சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது ஐசியூ எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவுக்குள் செல்லும்போது காலணிகளை கழற்றிவிட்டுச் செல்லும்படி கோரிக்கை விடுத்த, சிவந்தி ஆதித்தனின் சிறப்பு மருத்துவர் கருணாநிதி, அன்று இரவே காவலரை பணிசெய்யவிடாமல் தடுத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அரசியல் சர்ச்சையாக மாறியிருக்கிறது. எழுபது வயதான இந்த மருத்துவர் இரவோடிரவாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட செயல் பரவலான கண்டனங்களை எழுப்பியுள்ளது.

இதை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் திமுக தலைவர் மு கருணாநிதி, 70 வயதான ஒரு மூத்த மருத்துவர் மீது இந்த அளவிற்குத் தீவிரமாக இரவோடு இரவாக கைது செய்து புழல் சிறையிலே அடைக்கும் அளவிற்கு அவர் செய்த குற்றம் என்ன ? யாரையாவது கொலை செய்து விட்டாரா ? கொள்ளை அடித்து விட்டாரா? அல்லது யாரையாவது கடத்தித்தான் சென்றுவிட்டாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பல்வேறு மருத்துவ சங்கங்களும், வழக்கறிஞர் அமைப்புக்களும் கூட இந்த கைது நடவடிக்கையை கண்டித்திருக்கின்றன. மருத்துவர் கருணாநிதி மீதான வழக்கு பொய்வழக்கு என்று கூறிய இந்திய மருத்துவர் சங்கத்தின் தேசியத் தலைவர் மருத்துவர் விஜயகுமார், அந்த வழக்கை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மருத்துவமனையின் ஐசியு பிரிவுக்குள் முதல்வர் சென்றபோது செருப்பை கழற்றும்படி கூறிய மருத்துவர், காவலரை கடமை செய்யவிடாது தடுத்ததாக கைதுசெய்யப்பட்டது தவறு என்கிறார் இந்திய மருத்துவர் சங்கத் தலைவர்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts