முஸ்லீம்முடைய வாழ்வில் ஹலால்,ஹராம் பேணுவதன் அவசியம்'எனும் தலைப்பில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின்
கலாசார உத்தியோகத்தர் மௌலவி அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மத் (காஸிமி)
அன்மையில் இடம் பெற்ற இஸ்லாமிய ஒன்று கூடல் நிகழ்வில் ஆற்றிய உரை.
முழு மனித வாழ்வுக்குமான அனைத்து விடயங்களையும் இஸ்லாம் போதனை செய்கின்றது. குறிப்பாக இஸ்லாமும்
அதன் போதனைகளும், வணக்கவழிபாடுகள், கொடுக்கள் வாங்கல், குடும்ப வாழ்வு, ஓழுக்கவியல், குற்றவியல் என மனிதனது முழு வாழ்வுக்கும் தேவையான அனைத்து விடயங்களிலும் வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. இவையனைத்திலும் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மாறாக, தான் நினைத்தற்போல் செயற்பட முடியாது.
மூஆமலாத் எனும் போதனையினூடாக... கொடுக்கல்,வாங்கல், தொழில்சார் முயற்சிகள், ஹராம், ஹலால் என்ற விடயம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. இவைகள் முஸ்லிமுடைய ஆன்மிக உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது. இதனை அல்குர்ஆன் 'மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் ஆகுமானதையும், தூய்மையானதையும் புசியுங்கள். ஷைத்தானிய வழிகளை பின்பற்றாதீர்கள். நிச்சயமாக, அவன் உங்களுக்கு பகிரங்க விரோதியாவான் (2:168)
எனவே ஆகுமான தூய்மையான உணவு என்பது முழு மனித சமூதாயத்திற்;கும் ஆரோக்கியமானது. ஆகுமான உணவுகள் தூய்மையான உணவுகள் முஸ்லிமுக்கு மட்டும் நன்மை பயப்பது அல்ல. முழு மனித சமூதாயத்திற்;கும் பயனுள்ளதாகும். இறை தூதரின் பணி பற்றிக் குறிப்பிட்ட அல்குர்ஆன், அவர் அவர்களுக்கு தூய்மையானவற்றை அனுமதிப்பார் மேசமானவற்றை அவர்களுக்கு தடுப்பான் என குறிப்பிடுகின்றது. (7:157)
ஹலால் உணவு முறை பெரியதொரு பிரச்சினையாக தற்போது இந்த நாட்டில் பிரஸ்தாபிக்கப்படுகின்றது. இவ்விடயத்தை முஸ்லிம்கள் பலரும் பிழையாக புரிந்து கொண்டது போல, முஸ்லிம் அல்லாதவர்களும் தவறாக புரிந்து வைத்துள்ளனர். முஸ்லிம் அல்லாதவர்கள், ஹலால் என்றால் முஸ்லிம்கள் தங்களது கடவுளுக்கு பூஜித்த உணவு என்று தவறான புரிதலில் உள்ளனர். முஸ்லிம்களில் பலரோ! இறைவனின் பெயர் கூறி அறுக்கப்படும் மாமிசங்களுடன் சம்பந்;தப்பட்டது. என குறுகியதொரு விளக்கத்தை கொண்டுள்ளனர். இவ்விரண்டு புரிதல்களுமே ஹலால் பற்றி இஸ்லாமிய எண்ணக்கருவில் பிழையானவையாகும்.
ஹலால் என்பது முஸ்லிம்களது கடவுளுக்கு படைக்கப்பட்டது என்பதனை குறிப்பது அல்ல. மாறாக, மாமிச உணவாயின் இஸ்லாமிய முறையில் அறுக்கப்பட்டது. எனவும் ஏனைய உணவாயின், மனித உல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் அதில் உள்ளடக்கப்பட வில்லை என்பதே அதன் பொருளாகும்.
எனவே, மனித உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என வைத்திய ரீதியாக நிரூபிக்கப்பட்ட உணவு முறைகளை தவிர்ப்பது அனைவருக்கும் நன்மையானதே!
இதே வேளை, முஸ்லிம்களில் பலரும் ஹலால் என்ற விடயத்தை இறைவனின் பெயர் கூறி அறுக்கப்படும் மாமிச உணவுகளுடன் மடடுமே மட்டுப்படுத்தி நோக்குதல் பிழையான கண்ணோட்டமாகும். இஸ்லாம் முஸ்லிமுடைய உணவு, உடை, உறையுள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் ஹலால் அடிப்படையில் அமையப்பெறுதல் வேண்டும் என போதிக்கின்றது.
இந்த யதார்ததை புரித்து கொள்ளாத பல முஸ்லிம்கள் அறுக்கப்பட்ட மாமிச உணவு விடயத்தில் மட்டும் ஹலால் கவனித்து ஏனைய விடயங்களில் ஹராம்களுடன் இணைந்தே வாழ்கின்றனர்.
இன்றைய உணவு முறையிலும் அன்றாட பாவனை பொருட்களிலும் ஹரமான சேர்கைகளின் ஊடாட்டம் மிகைத்து நிற்பதால், இவை குறிந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவையும், தார்மீகப் பொறுப்பும் முஸ்லிம் சமூகத்தின் வழி நடத்துனர்களான உலமாக்களின் தலையாய கடமையாகும்.
எனவே, இலங்கையின் ஜம்இய்யதுல் உலமா சபை இன்றைய உணவு முறையின் ஆபத்தான போக்கை கவனத்திற் கொண்டு முஸ்லிம்களை ஹராத்தில் இருந்து பாதுகாக்க 2000ஆம் ஆண்டளவில், உற்பத்தி பொருட்களுக்கான ஹலால் சான்றிதழ் வழங்கும் பொறி முறையை அறிமுகம் செய்தது.
முஸ்லிம்களில் சிலர், ஏதோ! உலமா சபை சான்றிதழ் கேட்பவர்களுக் கெல்லாம் பணத்தை பெற்று கொண்டு சான்றிதழ் வழங்குகின்றது. என குறை மதி கொண்டுள்ளனர்.
ஆயினும், இப்பணியானது மிகப் பெரியதொரு ஆளனியினர், துறை சார் நிபுணர்கள், புத்திஜீவிகள், மார்க்க அறிஞர்கள், சட்டதுறை அறிஞர்கள் என்போரை கொண்டு ஓழுங்கமைக்கப்பட்ட பொறி முறையின் அடிப்படையில் செயற்படும் ஒரு பணி. என்பதனை அறியாது வாய்க்கு வந்த மாதிரியெல்லாம் விமர்சனங்களை தொடுக்கின்றனர். எனவே இவ்விடயம் குறிந்து அனைவரும் தெளிவு பெறுதல் அவசியமாகும்.
ஹலால் சான்றிதழ் பெறி முறையை தக்க வைத்துக் கொள்ள உலமா சபை எடுத்துக் கொண்ட பிரயத்தனங்கள், முயற்சிகள் என்பன குறித்து எவ்வித அறிவுமில்லாமல், பொறுப்பற்ற முறையில் உலமா சபையின் முயற்சியை விமர்சிப்பதும், குறை கூறுவதும் அறிவுடைமையன்று. என தமது உரையில் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்: