நாட்டுக்காகவும்
இனத்திற்காகவும் குரல் கொடுக்காத அரசியல்வாதிகளை விகாரைகளில் இருந்து
விரட்டியடிக்க வேண்டும் எனவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட
அத்தே ஞானசார தேரர் களனி பொல்லேகல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுபல
சேனாவின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு
தெரிவித்துள்ளார்.
அவர் மேலும்
தெரிவித்ததாவது; உலகில் மிகவும் உயரமான புத்தர் சிலையை நிர்மாணிக்க பணத்தை
செலவிடுவதை விட, பௌத்த சாசனத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் வறிய மக்களை
மேம்படுத்தி, தேசிய வர்த்தகர்களை வலுப்படுத்தவும் முதலிடம் வழங்கப்பட
வேண்டும். பெளத்த இனத்தை எழுச்சிப்பெற செய்யக்கூடிய உபதேசங்கள் அவசியம்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் மோதல் முரண்பாடுகள்
இருக்கின்றன என்பதை உலகத்திற்கு காட்ட வேண்டிய தேவையுள்ள முஸ்லிம்
அடிப்படைதிகளின் ஒரு நாடகமே பெப்பிலியானவில் அரங்கேறியது. முஸ்லிம் வஹாப்
வாதம் நாட்டை விழுங்கும் முன்னர், அதனை அரசாங்கம் தடைசெய்ய வேண்டும் என
கோரிக்கை விடுப்பதாகவும் ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
பெப்பிலியாவில் பெஷன்பக் மீதான தாக்குதலை மேற்கொண்டவர்கள் பேரினவாத
போக்குடைய பெளத்தர்களும் அவர்களுடன் வந்த குண்டர்களுமே. அங்கு CCTV
கமெராவில் பதிவான தேரர்களின் வீடியோ காட்சிகளை ஊடகங்களுக்கு
வெளியிடவேண்டாமென நிர்வாகத்துடன் ஏன் பேசவேண்டும்? இங்கு நாடகமாடுவது
முஸ்லிம்களா இல்லை தேரர்களா?
இதேவேளை, குருணாகலில் நோலிமிட்
மற்றும் பெஷன் பக் ஆடை விற்பனை நிலையங்களில் ஆடைகளை கொள்வனவு செய்கின்ற
சிங்களவர்களுக்கு கூல் முட்டை வீச்சு தாக்குதல் நடைபெற்று வருகின்றமை
குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சிங்கள அடிப்படைவாத பேஸ்புக்கில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்: