பொது பல சேனா அமைப்பில் முஸ்லிம் பிரிவொன்றை நிறுவுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக அவ்வமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
கடந்த வெள்ளியன்று அவ்வமைப்பின் தலைமையகமான சம்புத்தத்வ ஜயந்தியில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். பெப்பிலியான பெஷன் பக் வர்த்தக கட்டடம் மீதான தாக்குதல் தொடர்பில் விளக்கமளிக்கும் முகமாகவே குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்;
நாம் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல. முஸ்லிம்அடிப்படை வாதத்தையே நாங்கள் எதிர்க்கிறோம். குறித்த வர்த்தக கட்டடம் மீதான தாக்குதலை யார் செய்திருந்தாலும் எக்காரணத்துக்காக செய்திருப்பினும் அதனை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
பொது மக்களோ பிக்குகளோ சட்டத்தை கையிலெடுப்பதை அனுமதிக்க முடியாது.
முஸ்லிம் அடிப்படைவாதிகளிடமிருந்து தமது சமூகத்தையும் நாட்டையும் மீட்டுத் தருமாறு சம்பிரதாய முஸ்லிம்கள் எம்மிடம் கோரிக்கை விடுக்கின்றனர். அவர்களை பொது பல சேனாவுடன் சேர்த்து செயற்பட நாம் அழைப்பு விடுக்கிறோம். எதிர்காலத்தில் பொது பல சேனாவில் முஸ்லிம் பிரிவொன்றை செயற்படுத்தவும் நாம் எதிர்பார்க்கிறோம்.
முஸ்லிம்களை பயப்படவேண்டாம் என நாம் கூறுகிறோம். எந்த பிரச்சினைக்கும் வன்முறைகளூடாக தீர்வு காணமுடியாது. முஸ்லிம்களுக்கு ஏதும் பிரச்சினைகள் இருப்பின் இது தொடர்பில் அவர்கள் எம்முடன் தாராளமாக பேசலாம். அதற்காக நாம் மேடை அமைத்திருக்கிறோம் எனவே அது தொடர்பில் நாம் பேசலாம் என தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவ்வமைப்பின் தேசிய அமைப்பாளர் டிலந்த விதானகே
நாட்டில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கிடையில் எவ்வித ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டமிட்ட இனவாத மோதல்களும் கிடையாது என தெரிவித்ததுடன் தனிப்பட்ட மோதல்களை இன மோதல்களாக சித்திரிக்கக் கூடாது என தெரிவித்தார்.

0 கருத்துகள்: