18 ஆம் நூற்றாண்டு வரை அரக்கன் என்ற பகுதியில் வாழந்து வந்தவர்கள் ரோஹிங்ய இன மக்கள் , இவர்கள்
இஸ்லாத்தை பின்பற்றி வருபவர்கள் . 1784 ஆம் ஆண்டில் இவர்கள் வாழ்ந்து
வந்த பகுதி படையெடுப்பு காரணமாக பர்மாவோடு இணைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டு
அந்த அடிப்படையில் பர்மாவின் ஒரு பகுதியாக ரோஹிங்ய இன மக்கள் வாழந்து
வந்த அரக்கன் பகுதியும் சேர்த்து கொள்ளப்பட்டது . ரோஹிங்ய இன மக்கள் பல
அடக்குமுறைகளை சந்தித்து வந்தார்கள் , அவர்களின் அடிப்படை உரிமை
பறிக்கப்பட்டது பல ஆண்டுகளாக தொடர்ச்சியான புறக்கணிப்பை சந்தித்து
வந்தார்கள் .
1824 முதல் ஆங்கிலேயர்கள் பிடியில் பர்மா இருந்தது , அதன் பிறகு ஜனவரி 4, 1948 ஆம் ஆண்டு பர்மா சுதந்திரம் அடைந்தது , ரோஹிங்ய இன மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அவர்களும் பர்மாவின் குடிமக்கள் தான் , இந்த மண்ணில் அணைத்து இனத்திறக்கும் உள்ள உரிமைகள் அவர்களுக்கும் உண்டு என 1951 ஆம் ஆண்டில் பர்மாவின் முதல் பிரதமர் "யூ நூ" நாடாமன்றத்தில் அறிவிப்பு செய்தார் .
1962 ஆம் ஆண்டு பர்மாவில் இராணுவ ஆட்சி தொடங்கியது , ராணுவ தளபதியாக இருந்த "நீ வின்" ஆட்சியை கைப்பற்றினார் , பிரதமர் "யூ நூ" வை சிறைப்படுதினார் , சோசியலிச நாடாக பர்மாவை அறிவிப்பு செய்ததோடு அதை ராணுவ அதிகாரிகளை கொண்ட புரட்சிகர குழு வழிநடத்தும் என்று அறிவிப்பு செய்தார் , அதன் பிறகு நடந்த பல்வேறு அரசியல் மாற்றங்களால் 1990 ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது பெருமான்மையான இடங்களில் "ஆங் சான் சூ சீ " யின் கட்சி வெற்றி பெற்றது ஆனால் ராணுவத்தினர் அவரை ஆட்சி செய்ய அனுமதிக்கவில்லை .
அதன் பிறகு "ஆங் சான் சூ சீ " க்கு வீட்டு காவல் , அதை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு பெளத்த பிக்குகள் நடத்திய "காவி புரட்சி" என்னும் போராட்டம் , 2008 ஆம் ஆண்டு இரண்டு லட்சம் உயிரிகளை பலி வாங்கிய "நர்கிஸ் புயல் " , 2009 ஆம் ஆண்டு சான் மாநிலத்தில் பல் வேறு இனத்தவரோடு ராணுவத்தினர் கடுமையாக மோதியது என பர்மாவில் அரசியல் நெருக்கடிகளுக்கு பஞ்சம் இல்லாமலே இருந்து வந்தது , 2010 இல் மீண்டும் தேர்தல் நடத்துவது என முடிவு செய்து அதிலும் இராணுவத்தினர் பல தில்லுமுல்லுகள் அரங்கேற்றியதாக சொல்லப்பட்டது அதை ஐக்கிய நாடுகள் சபையும் உறுதி செய்தது இதன் விளைவாக மார்ச் 2011 இல் ராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது . 2012 இல் தேர்தல் என மீண்டும் பல அரசியல் சூறாவளி வீச முன்னாள் ராணுவ அதிகாரியாகவும் , ராணுவ ஆட்சியின் போது தலைமை பொறுப்பு வகித்தவருமான "தென் சன் " தற்சமயம் பர்மாவின் அதிபராக உள்ளார் . எதிர் கட்சி தலைவராக வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு அமைதிக்கான நோபல் பரிசும் , வெனிசூலா நாட்டின் சார்பாக மறைந்த சாவேஸ் வழங்கிய சைமன் பொலிவர் விருதையும் பெற்ற "ஆங் சான் சூ சீ" இருந்து வருகின்றார் .
1982 ஆம் ஆண்டு "நீ வின்" ராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியை கை பற்றியபோது பர்மா குடியுரிமை சட்டத்தினை அறிமுகப்படுத்தினார் அதன் அடிப்படையில் பர்மாவில் வாழும் 135 இனங்கள் இந்த மண்ணின் குடிமக்கள் என்ற தகுதியை பெற முடியும் என்றும் ரோஹிங்ய இன மக்கள் பர்மாவின் குடிமக்கள் அல்ல என்றும் அறிவித்தான் 49 கோடி மக்கள் தொகை உள்ள பர்மாவை பொறுத்தவரை இசுலாமியர்கள் 4% பேர் இதில் ரோஹிங்ய இன மக்கள் பெரும்பாலும் பர்மாவின் ரஹ்கினே மாநிலத்தில் வாழ்பவர்கள் . பர்மாவில் அரசியல் குழப்பங்கள் ஒரு புறம் நிகழந்து கொண்டு இருந்தாலும் எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் பின்பற்றும் மதம் , பேசும் மொழி , ஆகியவற்றால் திட்டமிட்டே கல்வியும் , குடியுரிமையும் இழந்து பல ஆண்டுகளாக பர்மாவில் நாடற்றவர்களாக ரோஹிங்ய இன மக்கள் வாழந்து வருகின்றார்கள் .சொந்த மண்ணில் வாழ முடியாதவர்கள் இந்தோனேசியா , வங்காளதேசம் போன்ற நாடுகளுக்கு சென்றாலும் கூட அங்கேயும் குடியுரிமை கிடைக்காமல் , அகதிகளாக அவதிப்பட்டு கொண்டு இருக்கின்றார்கள் . எல்லா திசைகளிலும் ஒடுக்கப்படும் ரோஹிங்ய இன மக்கள் மீதான இன வெறி தாக்குதல் கடந்த இரண்டு சில ஆண்டுகளாக மேலும் தீவிரம் அடைந்துள்ளது .
ரோஹிங்ய இன மக்களின் பூர்விக பூமியான "அரக்கன் பகுதி" இப்போது பர்மாவின் ரக்ஹினே என்னும் மாநிலமாக இருந்துவருகின்றது , பர்மா முழுவதும் பரவி கிடக்கும்
பௌத்தர்களின் இனவெறி இப்போது இனப்படுகொலையில் போய் முடிந்து இருக்கின்றது இந்த பகுதியில் இருக்கும் ரோஹிங்ய இன மக்கள் கடந்த சில நாட்களாக மீண்டும் (மார்ச் மாதம் 2013) கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றார்கள் , அவர்களின் மசூதிகள் ஊர் தோரம் கொளுத்தப்பட்டு வருகின்றது , கல்வி உரிமை மறுக்கப்பட்டு வருவதால் தங்கள் சொந்த மொழியிலேயே குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க நடத்தப்பட்டு வந்த பள்ளிகூடங்கள் தீயில் எரிந்து நாசமாகி வருகின்றது . தொடரும் இனப்படுகொலையால் இதுவரை பல நூறு பேர் கொள்ளப்பட்டு உள்ளார்கள் ,
ஏற்கனவே செப்டம்பர் மாதம் 2012 இல் பெளத்த பிக்குகளின் தூண்டுதலால் "மாங் நீ பார" என்னும் இடத்தில 120 பேர் கைது செய்யப்பட்டு கடுமையா தாக்கபட்டுள்ளார்கள் , " மௌங்டா " என்னும் பகுதியில் ராணுவ முகாம்களில் பலர் சுட்டு கொள்ளப்பட்டுள்ளார்கள் , 25 பேருக்கு மேற்ப்பட்டோரின் கால் நரம்புகள் வெட்டப்பட்டு நடு வீதியில் வீசபட்டவ்ர்களை மருத்துவமனையில் அனுமதிக்க சென்ற போது மருத்துவம் பார்க்க முடியாது என்று விரட்டி அடிதுள்ளனர் பெளத்த தேசத்து மருத்துவர்கள் . "புண்டு பராங் " என்னும் பகுதியில் சுமார் 80 பேர் எங்கே போனார்கள் என்பதே இன்று வரை தெரியாத நிலையில் , அச்சத்தின் பிடியில் வாழ்ந்து வந்த ரோஹிங்ய இன மக்கள் மீண்டும் (மார்ச் 2013) சில நாட்களாக தொடங்கி உள்ள இனப்படுகொலையில் இருந்து தப்பிக்க பயந்து வங்களாதேசம் செல்ல முயன்ற பலரும் தடுத்து நிறுத்தப்பட்டு சித்ரவதை செய்யபட்டு வருகின்றார்கள் , பல பெண்கள் கற்பழிக்கப்பட்டு பாலியல் வல்லுரவுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றார்கள் . சில நாட்கள் இடைவேளைக்கு பிறகு மீண்டும் தொடங்கி இருக்கும் இந்த கொடும்செயலுக்கு காரணமாக சொல்லப்படுவது ஒரு நகை கடையில் ரோஹிங்ய இனத்தனவருக்கும் அந்த பகுதியில் இருந்த பௌத்தர் ஒருவருக்கும் ஏற்பட்ட தகராறு என்றும் , ஒரு சிறு வாக்குவாதம் தான் இவ்வுளவு பெரிய இனப்படுகொலைக்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும் , இசுலாமியர்களான ரோஹிங்ய இன மக்களுக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் இனப்படுகொலைக்கு காரணம் "விராத்து" எனும் பெளத்த பிக்கு என்ற உண் மைகள் வெளி வர தொடங்கி உள்ளனர் .
2003 ஆன் ஆண்டு இசுலாமியர்களின் புனித நூலான குரானை பற்றி இழிவாக பேசியதாலும் , குறிப்பாக இசுலாமியர்காளன ரோஹிங்ய இன மக்களை பர்மாவில் இருந்து விரட்ட வேண்டும் என்று பரப்புரை செய்ததாலும் 25 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் , பிறகு பொது மன்னிப்பு வழங்க பட்டு சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் தன் வேலையை தொடங்கியுள்ளார் , பர்மாவில் உள்ள அணைத்து பௌத்தர்களும் "969 பெளத்த தேசிய பிரசாரம்" என்ற பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் பௌத்தர் அல்லாதவரோடு சமுக , பொருளாதார , தொடர்பு ஏதும் வைத்து கொள்ள கூடாது என்று அறிவிப்பு செய்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்ததின் விளைவாக தான் நாடற்று , நாதியற்று கிடக்கும் பூர்வீக குடிகளான ரோஹிங்ய இனத்தவர்கள் மீது திட்டமிட்ட இனப்படுகொலையை பர்மா அரசின் ஆதரவோடு பௌத்தர்கள் செய்து வருகின்றார்கள் . இவர்கள அனைவரையும் வழிநடத்துவது "விராத்து " . இவரின் தூண்டுதலின் பேரிலேயே , அரசின் துணையோடு இசுலாமியர்களின் கடைகள் , வீடுகள் என அவர்கள் வாழ்விடங்களும் , அடையாளங்களும் ராணுவம் , காவல் துறை , பெளத்த அமைப்புகள் துணையோடு அழிக்கப்பட்டு வருகின்றது . இலங்கை தீவில் தமிழர்களை கொண்டு குவித்தது போல இப்போது பர்மாவில் இசுலாமியர்களான ரோஹிங்ய இன மக்களையும் புத்தரின் பெயரில் அழித்து வருகின்றார்கள்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலை தான் பர்மாவில் வாழும் பௌத்தர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்து இருக்க வேண்டும் காரணம் மறைமுகமாக மதத்தின் பெயராலும் , இனத்தின் அடிப்படையிலும் ரோஹிங்ய இன மக்களை புறக்கணித்து வந்த பௌத்தர்கள் இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த தமிழ் மக்கள் மீதான இனஅழிப்பிற்கு பின்பு தான் கொன்று குவிக்க தொடங்கி உள்ளார்கள் . இப்படி பட்ட செயல்களில் பௌத்தர்கள் ஈடுபட்டாலும் அவர்களின் மீது எந்த நடவடிக்கையும் பர்மா அரசு எடுக்கவில்லை மாறாக எந்த இடங்களை எப்போது தக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்து கொண்டு இருக்கின்றார்கள் பெளத்த பிக்குகள் எப்படியாவது ரோஹிங்ய இன மக்களை பர்மாவில் இருந்து விரட்ட வேண்டும் என்ற முயற்சி பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதால் இப்படிப்பட்ட திட்டத்தை அரசே பெளத்த பிக்குகளுக்கு வழங்கி உள்ளது , ரோஹிங்ய இனத்தவ்ர்கள் எங்கள் நாட்டினர் இல்லை என்ற குரல் பர்மா முழுவதும் கேட்க தொடக்கி இருக்கின்றது
மண்ணின் மைந்தர்கள் இன்று பிணங்களாக ரக்ஹினே மாநிலம் முழுவதும் காட்சி தருகின்றார்கள் , இந்த நிலையில் ஐநா மன்றம் சார்பாக பர்மாவின் ஆலோசகரான விஜய் நம்பியார் , சம்பவ இடங்களில் சென்று பார்வையிட்ட பிறகு இசுலாமியர்கள் படுகொலை செய்ய பட்டுள்ளார்கள் ஆனால் அவர்களோடு ஒன்றாக வாழ்ந்த பௌத்தர்கள் ஏன் இப்படி செய்து கொண்டு இருகின்றார்கள் என்று அவர்களுக்கு புரியவில்லை என்று வழக்கம் போல ஒரு கதையை சொல்லி இருக்கின்றார் , பல ஆண்டுகளாக குடியுரிமை வழங்கப்படதா இசுலாமியர்களான ரோஹிங்ய இன மக்களோடு பௌத்தர்கள் தோழமையோடு வாழந்து வந்தார்கள் என்று எப்படி நாம் ஏற்றுகொள்ள முடியும் . பர்மாவில் இருந்து தமிழர்களும் விரட்ட ப்பட்டார்கள் என்பதையும் நாம் மறந்து விட முடியுமா ..??
பர்மாவில் இடைவேளை ஏதுமில்லாமல் அடக்கமுறைக்கு ஆளாக்கப்படும் ரோஹிங்ய இன மக்கள் சுமார் ஒரு லட்சம் பேர் குடும்ப உறவுகளை இழந்து இடம்பெயர்ந்து உள்ளார்கள் . அடுத்தவனுக்கு துன்பத்தை தராதே என்று சொன்ன புத்தரின் பெயரிலேயே இவ்வுளவு பெரிய இனஅழிப்பு நடந்து கொண்டு இருப்பது வேதனையின் உச்சம் ! பௌத்தத்தின் உயர்ந்த தத்துவங்களை இலங்கையும் , பர்மாவும் குழி தோண்டி புதைத்து விட்டார்கள் என்பதை எவரும் மறுக்க இயலாது
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற "ஆங் சான் சூ சீ" யும் அமைதியாக சில அறிக்கைகள் மட்டும் வெளியிட்டு கொண்டு இருகின்றார் , தன் பர்மா சுற்றுப்பயணத்தின் போது ரோஹிங்ய இன மக்கள் பற்றி பேசிய ஒபாமா இலங்கைக்கு எதிராக இனப்படுகொலை நடந்து முடிந்து மூன்று ஆண்டுகள் கழித்து ஐ நா சபையில் தீர்மானம் கொண்டு வந்ததை போல , இன்னும் எத்துனை ஆண்டுகள் கழித்து வாய் திறப்பார் என்று தெரியவில்லை , பர்மாவின் அதிபர் தென் சன் , அவருக்கு சாதமாக , இசுலாமியர்களுக்கு எதிராக செயல்படும் பௌத்தர்களின் செயலை அமைதியாக ரசிக்கின்றார் . பர்மாவில் நடப்பதை பாகிஸ்தான் கண்டிப்பதால் இந்தியா கண்டிக்காது , அது வெளி நாட்டு சிக்கல் என அகிம்சையான முறையில் ஒதுங்கி கொள்ளும் . அரக்கன் பகுதியில் (ரக்ஹினே பகுதியில்) பூர்வீக குடிகளான ரோஹிங்ய இன மக்களுக்காக ஆதரவாக பேசக்கூட முடியாத நிலை உருவாகி உள்ளது , சர்வேதேச சமுகம் வேடிக்கை மட்டுமே பார்க்கின்றது நம் தமிழகத்தில் உள்ள ஈழ விரும்பிகளுக்கோ பர்மாவில் உள்ள இசுலாமியர்களின் சிக்கல் கண்ணனுக்கு தெரியாது , காரணம் இங்கே அதை வைத்து அரசியல் செய்ய முடியாது , வழக்கம் போல பர்மாவின் பெயரை சொல்லி தமிழகத்தில் உள்ள ஒரு சிலரை மட்டும் இதற்காக குறை கூறி வாக்கு சேகரிக்க முடியாது .
இலங்கையில் பூர்விக குடிகளான தமிழர்களும் , அரக்கன் பகுதியில் பூர்விக குடிகளான ரோஹிங்ய இன மக்களும் படும் துயரம் பௌத்தம் ஹிந்துமயமானால் மனித நேயம் அங்கே இல்லாமல் போகும் என்பதை நமக்கு மிக தெளிவாக உணர்த்துகின்றது , .
பர்மா இதற்கு மற்றொரு பெயர்
மியான்மர் மட்டும் அல்ல
.....மனித நேயம் இல்லை ....... என்பதும் தான்
என்று வரலாறு நிச்சயம் ஒரு நாள் சொல்லும்
(இலங்கையில் நடந்ததையும் , பர்மாவில் நடப்பதையும் முதலில் எதிர்க்க வேண்டியவர்கள் உண்மையான பௌத்தர்களே )
புத்தம் சரணம் கச்சாமி !
தம்மம் சரணம் கச்சாமி !
சங்கம் சரணம் கச்சாமி !
-- அசோக்

0 கருத்துகள்: