தாலிபான்
தலைவர் முல்லா உமர் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஆப்கானிஸ்தான் அதிபர்
தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாய் கோரிக்கை
விடுத்துள்ளார். ஜெர்மன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இதுத் தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார் கர்ஸாய்.
இதுக்குறித்து அவர் மேலும் கூறியது:தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் மக்கள்
விருப்பத்தை அறியலாம். ஆப்கான் அரசு சில காரியங்களுக்காக மட்டுமே
தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதுவரை நேரடியாக பேச்சுவார்த்தை
நடத்தவில்லை. ஆயுதத்தை கீழே வைத்துவிட்டு தாலிபான் அரசியலில்
இறங்கவேண்டும். எனது அரசை மேற்கத்திய நாடுகள் மதிப்பதில்லை. அனைத்து
நாடுகளுடனும் நாங்கள் மிகச்சிறந்த உறவை பேணுவதையே விரும்புகிறோம். இவ்வாறு
கர்ஸாய் கூறினார்.
0 கருத்துகள்: