அமெரிக்காவின்
"பாஸ்டன் யூனிவெர்சிட்டி"யில் பயிலும் முஸ்லிம் மாணவிகள்
"Islamic-Society-of-BU" என்ற அமைப்பை ஏற்படுத்தி, பெண்கள் "ஹிஜாப்"
அணிவதன் பலன்கள் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய கோட்பாடுகளின் நன்மைகளை
எடுத்துரைத்து வருகின்றனர்.
"Islamic-Society-of-BU" யின் தலைவி
சகீனா ஹசன் அலி மற்றும் துணைத்தலைவி ஜைனா இனாம் ஆகியோரின் கோரிக்கையை
ஏற்று, கடந்த மார்ச் 22 ஐ "ஹிஜாப் டே" என அறிவித்து, கல்லூரியில் பயிலும்
இந்திய வம்சாவழி ஹிந்துக்கள், கிருத்துவர்கள் யூதர்கள் என எல்லா
மதங்களையும் சேர்ந்த பல மாணவிகள் அன்றைய நாள் முழுவதும் "ஹிஜாப்" அணிந்து,
அனுபவரீதியான பாதுகாப்பையும் பயன்களையும் உணர்ந்தனர்.
அதை தொடர்ந்து, அன்று முதல், Sonia Perez Arias என்ற கிருத்துவ மாணவி,
இந்திய வம்சாவழி ஹிந்து மாணவி Richa Kaul, யூத சமூகத்தை சேர்ந்த Anya
Gonzales உள்ளிட்ட பல்வேறு சமூகங்களை சேர்ந்த சுமார் 40 மாணவிகள்,
தொடர்ந்து ஹிஜாப் அணிவதில் ஆர்வம் காட்டி வருவதாக கூறுகின்றார், சகீனா ஹசன்
அலி.
0 கருத்துகள்: