புதுடெல்லி:
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் 5 கருணை மனுக்களைக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்து விட்டார். மேலும் 2 பேரின் மரண தண்டனையை அவர் ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளார்

மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள 7 பேரின் கருணை மனுக்களை பரிசீலிக்குமாறு பரிந்துரைத்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது. அவர்களின் விவரம் வருமாறு:

ஹரியாணாவைச் சேர்ந்த தரம்பால் (ஒரு சிறுமியைப் பலாத்காரம் செய்ததுடன் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரைக் கொன்ற வழக்கு).

* ஹரியானா முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகள் சோனியா மற்றும் அவரது கணவர் சஞ்சீவ் (தனது பெற்றோர் உள்பட குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை சோனியா தன் கணவருடன் சேர்ந்து செய்த கொலை வழக்கு).

* உத்தரகண்டைச் சேரிந்த சுந்தர் சிங் (பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு)

* உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜாஃபர் அலி (தன் மனைவி மற்றும் 5 மகள்களைக் கொன்ற வழக்கு)

* கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரவீண்குமார் (ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரைக் கொலை செய்த வழக்கு).

* உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குர்மீத் சிங் (ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரைக் கொலை செய்த வழக்கு).

* உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் ராம்ஜி (தங்கள் தம்பி குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரைக் கொலை செய்த வழக்கு).

* மேலும், மனைவி மற்றும் மகளைக் கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த சைபண்ண நிங்கப்ப நாடிகர் என்பவரது கருணை மனுவும் நிலுவையில் இருந்து வந்தது.

குடியரசுத் தலைவர் முடிவு: இந்நிலையில், மேற்கண்ட நபர்களின் கருணை மனுக்களில், 7 கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் முடிவெடுத்துள்ளதாக தில்லியில் அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் 5 கருணை மனுக்களை அவர் நிராகரித்துள்ளார். குர்மீத் சிங், தரம்பால், சோனியா-சஞ்சீவ்குமார், பிரவீண்குமார், சுந்தர்சிங் ஆகியோரின் கருணை மனுக்களே அவை என்று தெரிகிறது. கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர்கள் விரைவில் தூக்கிலிடப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

தவிர, 2 பேரின் மரண தண்டனையை வாழ்நாள் முழுவதுமான ஆயுள் தண்டனையாகக் குறைத்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts