அதிகாலை
3.30 மணிக்கு தூங்கினால் குடிக்க தண்ணீர் கிடையாது குஜராத்தில்சூரத் :
வருங்கால பிரதமர் என்று பாஜகவால் முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடி ஆளும்
குஜராத்தில் அதிகாலை 3.30 மணிக்கு எழுந்திருக்கவில்லையானால் குடி
தண்ணீருக்கு கஷ்டப்படும் நிலை உள்ளது தெரிய வந்துள்ளது.
தெற்கு குஜராத்தில் உள்ள கப்ருதா தாலுகாவில் உள்ள தின்பாரி கிராமத்தில்
கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. அக்கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள
2,000 மக்களுக்கு தண்ணீர் எடுக்க ஒரே ஒரு கிணறு மட்டுமே உள்ளதால் தண்ணீர்
எடுக்க தங்களுக்குள் கட்டுப்பாடு வைத்துள்ளனர்.
முறையின்றி
தண்ணீர் எடுத்தால் கிணற்றில் நீர் இருக்காது என்பதாலேயே இத்தகைய
கட்டுப்பாடு என்று சொல்லும் கிராமத்தினர் காலை 4 மணியிலிருந்து தண்ணீர்
எடுக்க ஆரம்பிக்கின்றனர். காலை 4 மணிக்கு இரு தெருவை சேர்ந்தவர்கள்
எடுத்தால் அடுத்த 4 மணி நேரம் கழித்து மற்ற 2 தெருவை சேர்ந்தவர்கள் தண்ணீர்
எடுப்பார்கள். இப்படியாக ஒரு நாளைக்கு 2,3 தடவை மட்டுமே தண்ணீர் எடுக்க
அனுமதிக்கப்படும். ஒவ்வொரு முறையும் ஒரு குடம் தண்ணீர் மட்டுமே எடுக்க
அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே தான் 4 மணிக்கு
தண்ணீர் எடுக்க 3.30க்கே எழுந்திருக்க வேண்டிய நிலைக்கு கிராம மக்கள்
தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து கூறும் அத்தொகுதி சட்டமன்ற காங்கிரஸ்
உறுப்பினர் ஜிது சவுத்ரி மஹாராஷ்டிராவை ஒட்டியுள்ள சுமார் 30 கிராமங்களில்
நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அட்டவணை போட்டு தண்ணீர்
பிடிக்கும் நிலையில் உள்ளனர் என்று கூறியுள்ளார். இது குறித்து கருத்து
தெரிவித்த அதிகாரிகள் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் இன்னும் 15 நாளில்
சரி செய்யப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்: