அம்பிலிபிடிய பனாமுர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தகறாரொன்றினால் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இருவரது சடலங்களும் அம்பிலிபிடிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
திஸ்ஸமஹராம, கங்கசிறிபுற பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்றில் மூவர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோரே காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் கராபிடிய வைத்தியசாலையிலும் ஏனைய இருவரும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்: