இரான்
மற்றும் துபாய் போன்ற அரபுநாடுகளில் பல பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது
துபாயில் Earthquake in Dubai at 2:56 pm (4.26 pm IST) around 5
sec...என்று பதிவு ஆகி உள்ளது இரானில் நாற்பது பேர் இறந்ததாக தகவல்
தெரியவருகிறது அதை தொடர்ந்து டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை
நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள்
அலறியடித்துக்கொண்டு வெளியேறி, திறந்தவெளிகளுக்கு வந்தனர். இதேபோல் டெல்லி
புறநகர்களான குர்கான், நொய்டா, பஞ்சாப் தலைநகர் சண்டிகர்,ஜெய்பூர்
அகமதாபாத் ஆகிய இடங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது.
இதனால்
பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, தெருக்களில் திரண்டனர்.
பாகிஸ்தானை மையமாக கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் காரணமாக, பாகிஸ்தான்
மற்றும் ஈரானின் பல பகுதிகளிலும் கட்டிடங்கள் குலுங்கின.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது. எனவே அதிக அளவில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என
அஞ்சப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர்.
முன்னதாக இன்று காலையில் அசாம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அப்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒரு குழந்தை இறந்தது. 2 குழந்தைகள்
மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
துபாய், ஷார்ஜா, அஜ்மான்...
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வளைகுடா நாடுகளிலும் உணரப்பட்டது. துபாய்,
ஷார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில்
நிலநடுக்கம் உணரப்பட்டது. அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில்
வசித்து வரும் மக்கள் தங்கள் கட்டிடத்தை விட்டு தெருக்களில்
காத்திருந்தனர். அரைமணி நேரம் கழித்து தங்களது இருப்பிடங்களுக்கு திரும்பினர்.
பஹ்ரைன், கத்தாரிலும்...
அதே போல பஹ்ரைனிலும் கத்தாரிலும் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்தன.
இதையடுத்து அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் உயரமான கட்டடங்களில் இருந்தவர்கள்
உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலநடுக்கம் தெற்கு
ஈரான்-பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண எல்லையில் கஷ் என்ற பகுிதியில் மையம்
கொண்டிருந்தது. நிலத்துக்கு அடியில் 15.2 கி.மீ. ஆழத்தில் இந்த
நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 9ம் தேதி தான் ஈரானை 6.1 ரிக்டர் புள்ளிகள் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதும் அதில் 37 பேர் பலியானதும் நினைவுகூறத்தக்கது.
நிலநடுக்கத்தின் தாக்கத்தை விவரிக்கும் படம்:
கீழே உள்ள படம் அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள படமாகும்.
இதில் நிலநடுக்கத்தின் தாக்கத்தின் அளவு விவரிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்: