பிரதான உறுப்பினர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளும் கொள்கை முரண்பாடுகளும் பொது பல சேனாவுக்குள் இரு பிரிவுகளை
ஏற்படுத்தியிருப்பதாகவும் அம்முரண்பாடானது விரைவில் குறித்த அமைப்பை இரு
குழுக்களாக்கக் கூடும் எனவும் நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொது பல சேனாவின் உள்விவகாரங்களில் குறித்த அமைப்பினரிடையே வெவேறான கருத்துக்கள் நிலவியமை மற்றும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவது தொடர்பில் பிரதான உறுப்பினர்கள் இருவரிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை ஆகியன பொது பல சேனாவை விரைவில் இரண்டாக உடைத்து விடும் என அந்த தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இது தொடர்பில் விடிவெள்ளியிடம் கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரியான டிலந்த விதானகே பொது பல சேனாவுக்குள் எவ்வித பிளவும் இல்லை என தெரிவித்தார். ஒவ்வருவரிடமும் வித்தியாசமான கருத்துக்கள் காணப்பட்டபோதும் இறுதியில் பேசி சுமுகமான முடிவுகளுடனேயே தாம் முன்னோக்கி பயணிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமது அமைப்பின் முக்கிய அதிகாரம் உள்ள 5 உறுப்பினர்களில் செயலாளர் உள்ளிட்ட இருவர் தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும் ஏனைய 3 மூவரும் இலங்கையில் இருந்தாலும் எல்லோரும் எந்நேரமும் தொடர்பிலேயே இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இராவண பலய போன்ற ஏனைய சேனாக்கள் தாம் பிளவுபடுவதை விரும்பலாம் எனவும் எனினும் அது சாத்தியமற்றது என தெரிவித்த டிலந்த கருத்து வேறுபாடுகள் நிலவுவதை வைத்து பிளவு என்று கூறிவிட முடியாது எனவும் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: