'நீரின்றி அமையாது உலகு’ என்பது பழமொழி. மின்சாரம் இன்றி அமையாது உலகு என்பது புதுமொழி. நவீன வாழ்க்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த மின்சாரம் இன்று கடுமையான தட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மின்தட்டுப்பாட்டைக் குறைக்க, ஒரு புது வழியைக் கண்டுபிடித்து இருக்கிறார் ஆறாம் வகுப்பு மாணவி ஹர்சதா.

காரைக்கால் மாவட்டம், கீழகாசாகுடி, ஆத்மாலயா பள்ளியில் படிக்கிறார் ஹர்சதா. இவர் நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியில் இயங்கிவரும் 'ஹை-டெக் ரிசர்ச் ஃபவுண்டேஷன்’ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஜெயராஜ் மற்றும் முரளி ஆகியோரின் மேற்பார்வையில் தானியங்கித் தெருவிளக்கு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.

'ஒரு நாள், டி.வியில் ஹாலிவுட் படம் ஒன்றைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். அதில் ஒரு காட்சியில் ஆட்கள் வந்த உடன் அந்த இடத்தில் விளக்குகள் தானாக எரியும். ஆட்கள் நகர்ந்ததும் அணைந்துவிடும். இதைப் பார்த்ததும் இந்த மாதிரி நம்ம ஊர் தெரு விளக்கிலும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது'' என்கிறார் ஹர்சதா.

சிறுவயது முதலே அறிவியலில் ஆர்வம்கொண்ட ஹர்சதா, இந்த யோசனையைத் தனது ஆசிரியர்களிடம் சொல்லி இருக்கிறார்.

''வீட்டில் தேவை இல்லாமல் விளக்குகள் எரிந்தால் பொறுப்புடன் அணைக்கிறோம். ஆனால், தெரு விளக்கு விஷயத்தில் அப்படி இருப்பது இல்லை. இது மிகவும் தவறு. இதற்குத் தீர்வாக நம் கண்டுபிடிப்பு இருக்கவேண்டும். அதேநேரம் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காததாகவும், செலவு குறைவானதாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் இந்தத் தானியங்கி ஒளி அதிகரிப்பான். அதாவது, Automatic lights brightness increasing machine’’என்கிறார் ஹர்சதா.

இவர் வடிவமைத்து இருக்கும் தெருவிளக்குகளில்... எல்.டி.ஆர். என்ற அமைப்பின் மூலம், இருட்டத் தொடங்கியதும் தானாகவே ஒளிரும் வகையில் ஒரு சென்சார் அமைப்பு ஒன்று உள்ளது. ''அதோடு, மனிதர்கள் மற்றும் வாகனங்கள் குறிப்பிட்ட இடத்தை நெருங்கும்போது, தெருவிளக்கு பிரகாசமாக ஒளிர ஆரம்பிக்கும். அவர்கள் அந்த இடத்தைக் கடந்ததும் குறைந்த வெளிச்சத்தில் ஒளிரும். இந்த வகையில் மின்சாரத்தை மிக அதிக அளவில் சேமிக்க முடியும். தமிழ்நாட்டின் அனைத்துத் தெருவிளக்குகளையும் இந்த முறைக்கு மாற்றினால், மிக அதிக அளவில் மின்சாரத்தைச் சேமிக்கலாம்'' என்கிறார்.

இந்த விளக்கில் தற்போது 30 வாட்ஸ் எல்.இ.டி.க்களைப் பயன்படுத்தி இருக்கிறார். இதில் 25 வாட்ஸ் எல்.இ.டி., பொருட்கள் மின் கம்பத்தை நெருங்கும்போது ஒளிரவும், 5 வாட்ஸ் யாரும் இல்லாத நேரத்தில் சாதாரணமாக ஒளிரவும் உதவும்.

''இன்னொரு சிறப்பும் இருக்கு. இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எல்.டி.ஆர்., இருள் தொடங்கியதும் தானாகவே பல்பை ஒளிரச் செய்யும், பகல் வெளிச்சம் வந்ததும் ஒளிர்வதை நிறுத்திவிடும். இதனால், பகலிலும் விளக்கை எரியவிட்டு இருக்கிறார்களே என்கிற புகாருக்கு இடம் இல்லாமல் போய்விடும்'' என்கிறார் ஹர்சதா.

மேலும், பல கண்டுபிடிப்புகள் மூலம் அறிவியல் உலகில் பிரகாசமாக மின்ன ஹர்சதாவை வாழ்த்துவோம்!

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts