அரசுக்கு எதிரானவர்களும் முஸ்லிம், கிறிஸ்தவ அடிப்படைவாதிகளினதும் அரசை கவிழ்க்கும் முயற்சியாகவே கடந்த வெள்ளியன்று தமக்கெதிராக தமது அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக பொது பல சேனாவின் தலைவர் கிராம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.


குறித்த அமைப்பின் தலைமையகமான ஸ்ரீ சம்புத்தத்வஜெயந்தியில் இன்று மாலை நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த விமலஜோதி தேரர்,


கடந்த வெள்ளியன்று பொது பல சேனாவை கண்டிப்பதாக கூறி எமது தலைமையகம் முன் சிலர் ஆரப்பாட்டம் மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் குடியுரிமை உள்ளவர்கள்.

இவர்கள் இந்நாட்டின் பெளத்தர்களையும், பிக்குகளையும்,அரசையும் நோவிக்கும் விதமாக நடந்துகொண்டுள்ளனர். இவ்வாறான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நாடாளாவிய ரீதியில் இடம்பெறலாம்.

குறித்த ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்பு முகப்புத்தகம் ஊடாக திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் முஸ்லிம், கிறிஸ்தவ அடிப்படைவாதிகளும் அரசுடன் முரண்பட்டு விரக்தியில் உள்ளவர்களுமே உள்ளனர். அவர்கள் சிங்கள பெளத்தர்களாக தம்மை சித்தரித்து இந்நாட்டில் பெளத்தர்களுக்கும் சம்பிரதாய முஸ்லிம், கிறிஸ்தவ மக்களுக்கிடையிலான உறவை சீற்குலைக்க முயற்சிக்கின்றனர். என தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவ்வமைப்பின் நிறைவேற்று குழு உறுப்பினரான டிலந்த விதானகே,


குறித்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையிலுள்ள ஐ.நா.அலுவலகத்தில் கடமையாற்றும் பலருக்கு தொடர்பிருக்கிறது. ஏனெனில் அங்கு முகாமைத்துவ குழுவுக்கு தெரியாமல் குறித்த வேலைக்காக அவர்களது கணினிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரம் எம்மிடம் உள்ளன.அவர்கள் ஒரு கலகத்தை தூண்டுவதை எதிர்பார்த்தே வந்துள்ளனர்.

அரபு நாடுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை இங்கு ஏற்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர். இவர்களின் பின்னால் புலி ஆதரவாளர்களும் செயற்பட்டுள்ளனர்.

அவர்களிடம் பொலிசார் விசாரணை செய்தபோது ஆர்ப்பாட்டத்துக்கான பொறுப்பினை ஏற்க அங்கு ஒருவரும் முன்வரவில்லை. எனவே தான் பொலிசார் அவர்களை அங்கிருந்து சுமுகமாக கலைத்து அனுப்பினர். என தெரிவித்தார்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts