சட்டங்கள் உருவாக்கப்படுவது பொதுமக்களின் நேர்த்தியான வாழ்வினை உறுதி செய்வதற்காகவே. சட்டத்தையும் நியாயத்தையும் காப்பதற்காகவே சீருடை அணிந்த பொலிஸார் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் சட்டம்,மற்றும் ஒழுங்குகளை பேணி நடப்பதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் தான் இந்த பொலிஸ் அதிகாரிகள். அதாவது போக்குவரத்து அசம்பாவிதங்கள் நடைபெறாதவாறு அடையாளக்குறியீடுகள் வீதிகளில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வீதி ஒழுங்குகள் போடப்பட்டு வருகின்றது. வீதி ஒழுங்குகளை பொதுமக்கள் பேணி நடக்க வேண்டுமாக இருந்தால் மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் பொலிஸார் இவற்றை முதலில் பேணி நடக்க வேண்டும.

இது இவ்வாறிருக்க திருகோணமலை பஸ் தரிப்பிடத்துக்கு முன்னால் உள்ள கடை தொகுதிகளுக்கு செல்பவர்கள் கடைகளுக்கு முன்னால் வாகனங்களை நிறுத்தி விட்டுச்சென்றால் அவ்வாகன உரிமையாளர்களுக்கு எதிராக குற்றத்திற்கான தண்டப்பணம் அறவிடப்பட்டு வருகின்றது. வரவேற்கத்தக்கது! 

ஆனாலும் அக்கடைகளுக்கு முன்னால் நிறுத்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் வழங்கும் பொலிஸார் அதே பக்கமாக பிரதான வீதியில் தனது போக்குவரத்து கடமைக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வைத்துக்கொண்டு குற்றப்பத்திரம் வழங்குவதை படத்தில் மூலம் காணலாம்.இருந்த போதிலும் பொலிஸ் அதிகாரிகளுடைய படத்தை படம் பிடித்ததற்காக தனது கடமைக்கு பங்கம் விழைவித்ததாக கூறி ஊடகவியலாளருடைய தேசிய அடையாள அட்டையை பெற்று அவருடைய விபரம் திரட்டப்பட்டதுடன் தனக்கு (ஊடகவியலாளருக்கு) எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அக்கடமையில் இருந்த பொலிஸார் தெரிவித்தனர். பொதுமக்களுக்கு வீதி ஒழுங்குகளை ஊக்குவிக்கும் பொலிஸார் குறித்து தெரியப்படுத்தவே படங்கள் எடுக்கப்பட்டது. இருந்தும் ஊடகவியலாளருக்கு வழக்கு தாக்கல் செய்யவே பொலிஸார் விபரம் திரட்டினர்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts