தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படும் சாத்தியம் அறவே இல்லாத போதிலும் முஸ்லிம்களின் சமூக நலன் சார்ந்த விடயங்களில் பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தின் கீழ் அவை ஒன்றுபட்டு இயங்குவதற்கான சந்தர்ப்பங்களும் வாய்ப்புக்களும் இருப்பதாக முஸ்லிம் காங்கிரசின் தலவைர் கருத்து வெளியிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. அன்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் தமது அரசியல் தலைமைகள் மீது அவநம்பிக்கை கொண்டுள்ள நிலைமையின் வெளிப்பாடே அன்மையில் முஸ்லிம் பிரதேசங்களில் பல்வேறு அழுத்தங்களுக்கும் மத்தியில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு மக்களால் ஏற்படுத்தப்பட்டது என்பதனை தற்போது அரசியல் தலைமைகள் நன்கு உணர்ந்துள்ளதாகவே இவ்வறிக்கையின் பிரதிபழிப்பு காணப்படுகின்றது. முஸ்லிம் மக்களின் இந்த முஸ்லிம் அரசியல் மீதான அவநம்பிக்கையினை போக்கி தமது அரசியல் வியாபாரத்தை மீண்டும் சரிப்படுத்திக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை முஸ்லிம் அரசியல் தலைமைகள் தேடித்திரியவேண்டிய காலப்பகுதிக்குள் தள்ளப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் மீதான பல்வேறு பிரச்சிணைகள் தொடர்ந்தும் அரங்கேற்றம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தம்மாள் எதனையும் கூட்டாக தீர்மானம் மேற்கொள்ள முடியாத கையாலாகாத்தனத்தை ஒருவர் மீது மற்றவர் பழி போடும் சந்தர்ப்பவாதங்களும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
முஸ்லிம் அரசியல் தோழ்விக்கான பல காரணங்கள் முன்வைக்கப்ப்டுகின்ற போதும் குறிப்பிட சில பண்புகள் வெளிப்படையான அம்சங்களாகும்.
முஸ்லிம் அரசியல் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் கரங்களுக்குல் ஆட்பட்டு ஒருமித்த அரசியல் போராட்ட ஒழுங்கு (பிரித்தாளும் தந்திரம் - னுiஎனைந யனெ சுரடந)
கூறுபடுத்தப்பட்டுள்ளது. உரிமைக்கான அரசியல் போராட்டம் என்ற எண்ணக்கரு மாறி சலுகைகளுக்கானதும் அபிவிருத்திக்கானதுமான அரசியல் வியாபரம் என்றநிலையினை முஸ்லிம் அரசியல் பரினாமம் எடுத்துள்ளதாள் முஸ்லிம் சமூகமும் சந்தர்ப்பவாத அரசியல் வழிமுறையை நோக்கி வழிநடாத்தப்பட்டுள்ள துரதிஷ்ட நிகழ்வினை யாரும் மறுக்க முடியாது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் முக்கிய பாத்திரங்களாக பிரதேச அரசியலை தக்கவைக்கும் முல்லாக்களால் முஸ்லிம் அரசியல் கூறுபடுத்தப்பட்டுள்ளது. கொள்கை, கோஷங்களையெல்லம் மூட்டை கட்டிவிட்டு உறுப்பினர்களையும் தொண்டர்களையும் குண்டர்களையும் தக்கவைத்துக்கொண்டு சமூக நலனைவிட தனி நபர் முல்லாக்களது சுயநலன்களுக்கு மண்டியிடவேண்டிய நிலைக்குல் கட்சி தலைமைகள் தள்ளப்பட்டுள்ளது ஒன்றும் புதிய விடயமில்லை.
இது இவ்வாரிருக்க இலங்கை முஸ்லிம் அரசியல் தனக்கென ஒரு இலக்கினையும் திட்டங்களையும் கொண்டனவாக இல்லாமை இன்றைய முஸ்லிம் அரசியல் வீழ்ச்சிக்கு காரனமாகியது எனலாம். இலங்கை முஸ்லிம்களது வாழ்வியல் நிலைமைகள், குடிப்பரம்பல், அதிகார எல்லை என்பவற்றை கருத்திற்கொண்டு எவ்வாறு அரசியல் நகர்வுகளை முன்கொண்டு செல்லலாம் என்ற தெளிவான ஆய்வுகளும் முடிவுகளும் இல்லை என்பது முஸ்லிம் அரசியலில் ஒரு குறையாகவே இன்றும் உள்ளது. குறைந்தது முஸ்லிம்களது பிரச்சிணைகள் தொடர்பான ஒரு பூரண ஆவனங்கள் கூட இல்லாத நிலமையும் இங்கு நோக்கத்தக்கது. எனக்கு ஞாபகம் இருக்கின்றது அரச புலிகள் சமாதான பேச்சுவார்த்தை காலப்பகுதியில் பேச்சுவார்த்தை மேடைக்கு செல்வதற்காக விமான நிலையத்தில் இருந்து கொண்டு ஒரு முஸ்லிம் கட்சியின் தலைவர் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களது காணி தொடர்பான ஆவணங்களை பெக்ஸ் மூலம் உடனே அநுப்புமாறு கேட்டுக்கொண்டார். இதனை குறையாக கூறுவது எனது நோக்கமல்ல. நீண்ட அரசியல் பயணத்தை மேற்கொண்டுள்ள முஸ்லிம் பிரதிநிதிக்கட்சிகள் எவ்வாறு இருக்கின்றது என்பதற்கு இதுவே போதுமான ஆதரமாகும். வடகிழக்கு, வடகிழக்குக்கு வெளியான அரசியல் வழிமுறைகள் பற்றி எந்த தெளிவும் இவர்களுக்கும் இல்லை மக்களிடத்திலும் இல்லாத அரசியல் வங்குரோத்து நிலையினை நாம் எதிர்நோக்கியுள்ளோம்.
முஸ்லிம் அரசியல் தொடர்பான இஸ்லாமிய சிந்தணையும் பகிர்வுகளும் அரசியல் தலைவர்களிடமோ சாதாரண மக்களிடமோ சென்றடையாமையும் இவ்வாறு அரசியல் தேக்க நிலைக்கு காரணமாக அமையமுடியும் என கருதுகின்றேன். இஸ்லாமிய பிண்ணனியில் எவ்வாறு அரசியலை அமைத்துக்கொள்ளலாம் என்கின்ற போது இஸ்லாமிய வாதிகள் அரசியலை ஆதரிப்பதாகவோ அல்லது வழிநடாத்தல் செய்வதற்கோ தவரிவிட்டார்கள் என்பது என் நிலைப்பாடாகும். மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பிக்கமுன்னர் அரசியல் தொடர்பான இஸ்லாமிய நிலைப்பாடு, இஸ்லாமிய அறிஞர்களின் வழிகாட்டள்களை ஆரம்ப காலங்களில் பெற்றுக்கொள்ள முயற்சித்தும் அவரது எதிர்பார்ப்பிற்கு பூரண ஒத்துழைப்பு கிடைக்காமல் போனமையும் கசப்பான உண்மைகளே. இன்று இ ஸ்லாமிய அரசியல் அல்லது முஸ்லிம்களுக்கான அரசியல் என்கின்றபோது இஸ்லாமிய இயக்க பிண்ணனியில் வளர்க்கப்பட்டு இஸ்லாமிய இயக்கத்தினால் வழிநாடாத்தப்படும் அரசியல் குறித்தே தாம் ஆதரவிணையும் வழிகாட்டழ்களையும் வழங்க முடியும் என்ற எண்ணக்கரு முதலில் களையப்பட வேண்டும். சிறுபான்மை இஸ்லாமிய அரசியல் போராட்ட ஒழுங்கில்; ஷரியா என்ற பதமோ, இஸ்லாமிய கட்சி என்ற பதமோ முக்கியத்துவம் பெருவதில்லை. அப்படியான பதப்பிரயோகங்கள் இஸ்லாமிய அரசியலில் முக்கியத்துவம் மிக்கதாக இருக்குமானால் எகிப்து, துருக்கி, டியூனீஷியா போன்ற நாடுகளில் இஹ்வான்கள் தமது பெயரிலேயே களமிரங்கி இருப்பார்கள் மாத்திரமின்றி ஆட்சியை அமைத்துக்கொண்டபோது இஸ்லாமிய ஷரீஆ என்ற சொற்பதத்தை நேரடியாக பிரயோகித்திருப்பர். இங்கு சொற்பதங்கள் மட்டும் இஸ்லாமிய அரசியலாக அமைந்துவிடாது. அவ்வறு சொற்பதங்கள் இஸ்லாமிய ஆட்சியை கொண்டுவருவதாக அமையுமானால் பாகிஸ்தான் எப்போதே முன்னுதாரண இஸ்லாமிய நாடாக மாறி இருக்கும். இஸ்லாமிய ஷரியாவின் அடிப்படையான 'நன்மையான விடயங்களுக்கு ஒத்துழைப்போம். தீமையான வி;டயங்களுக்கு ஒதுங்;கி நிற்போம்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இலங்கை முஸ்லிம் அரசியலையும் நோக்க வேண்டியுள்ளது. கலாநிதி முனீர் ஷபீக் இதனை அழகாக குறிப்பிடுகின்றார். இஸ்லாமிய மயமாக்கள் அல்லது இஸ்லாமிய அரசியல் ஒழுங்கு என்பது எப்போதும் இஸ்லாமிய இயக்க பிண்ணனியில் வளர்க்கப்பட்டவர்களா ல்தான் முன்னெடுகப்படவேண்டும் என்பது தவறு. எமது இஸ்லாமிய கருத்துக்கு சார்பானவர்களைக்கொண்டு எமது இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும் என குறிப்பிடுகின்றார். எனவே அரசியல் தளத்தில் இஸ்லாமிய வாதிகளின் ஒதுக்கமும், வழிகாட்டள் இன்மையும் இஸ்லாத்தின் பெயரால் அரசியல் பிழைப்பு நடாத்துவதற்கு சிலருக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.
சிறுபான்மை முஸ்லிம் கட்சிகளின் இன்றைய தொய்வு நிலைக்கு காரணங்களில் ஒன்றாக தமது கட்சி உறுப்பினர்களை தேசிய, சர்வதேச அரசியல் பிண்ணனி கொண்டவர்களாக வளர்த்தெடுப்பதில் தவரியமையும் குறிப்பிடலாம். வெருமனே அவ்வப்போது எழும் பிரச்சிணைகளுக்கு உடனடித்தீர்வு வழங்கும் குழுக்களையே இன்று இக்கட்சிகள் உருவாக்கியுள்ளது. 'திவி நகும' தொடர்பான பிரச்சிணை சிறுபான்மையிடத்தில் காரசாரமாக பேசப்பட்டபோதும் அது பற்றி என்னவென்று தெரியாமல் ஆதரவாக வாக்களித்துவிட்டு எதிராக பேசித்திரிந்த கடந்தகால சம்பவங்கள் போதுமானதே. முன்னாள் கிழக்கு மாகாண சபையில் இப்பிரேரணை முதன் முதலில் கொண்டுவரப்படவிருந்த போது ஒரு மாகான சபை உறுப்பினரிடம் பிரேரணைக்கு முதல் நாள் இரவில் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாளங்கள் இது பற்றி தெளிவு படுத்தவேண்டி இருந்தது.
அதிகாரப்பரவலாக்களில் எத்தகைய தீர்வு முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதிலே ஒவ்வொருவரும் மாறுபட்டகருத்திணையும் குறுகிய பிரதேச வாத த்தினையும் வாக்கு வங்கிகளையும் கவனத்திற்கொன்டு மாத்திரம் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.

இதில் சிறுபான்மை முஸ்லிம்கட்சிகள் பற்றி பேசுகின்ற போது பெரும்பான்மைக்கட்சிகளின் முஸ்லிம் பிரதிநிதிகளின் கடமைகள் பற்றி பேசியே ஆகவேண்டும். குறிப்பாக வடகிழக்குக்கு வெளியே 2ஃ3 முஸ்லிம் சனத்தொகை வாழுகின்றது. இவர்களது குடிப்பரம்பலில் உள்ள சிக்கல் நிலைமையினால் சிலபோது தமக்கான தனிக்கட்சி ஆதிக்க சிந்தணையை வழுவடையச்செய்ய முடியாத நிலை உள்ளதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் தமக்கான அரசியல் பிரதிநிதிகளை பெரும்பான்மை இனக்கட்சிகளிநூடாகவே பெற்றுகொள்ள முனைப்புக்காட்டுகின்றனர். பொதுவான அரசியல் சிந்தனை இல்லா தனிக்கட்சி அரசியல் பரப்பில் இது பொருத்தமான ஒன்றாகவும் சில நேரங்களில் கருதப்படுகின்றது. இங்கு நிலைமை என்ன வென்றால் முஸ்லிம் தனிக்கட்சி முறைமை ஆரம்பிக்க முன்னர் முஸ்லிம் அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமூகத்தை கவனமாக வழிநடாத்தியுள்ளனர் என என்னத்தோன்றுகின்றது. ஒரு மிகச்சிருபான்மை சமூகமாக இருந்துகொண்டு பூரன உரிமைகளையும் சலுகைகளையும் ஓரளவு அநுபவிக்க வழியமைத்திருந்தனர். இதற்கான காரணம் அவர்கள் அக்கட்சிகளின் தீர்மான சக்திகளாகவும் நம்பிக்கையாளர்களாகவும் கானப்பட்டமையே. இன்று அவ்வாரான நிலைமையினை கானமுடியாதுள்ளது. இரவில் ஒரு கட்சி பகலில் இன்னொரு கட்சியென கட்சி மாறும் அரசியல் பெரும்பான்மை கட்சிகளிடத்தில் தற்போதய முஸ்லிம் பிரதிநிதிகள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய பிண்ணனிகலோடு புதியசட்டவாக்கங்களுக்கு துணை போனதும் இனோரன்ன விடயங்களும் முஸ்லிம் அரசியலை பலவீனப்படுத்தியுள்ளது என்று கறுத வேண்டியுள்ளது.
குறிப்பாக புலம்பெயர் முஸ்லிம் புத்திஜீவிகள் அமைப்புக்கள் வழுவற்றதாகவுள்ளதுடன் தமிழ் சமூகத்தின் புலம்பெயர் அமைப்புக்கள் போன்று கட்சி அரசியலில் அழுத்தக்குழுக்கலாக செயற்பட முடியாமையும் முஸ்லிம்களின் அரசியல் குறித்து சர்வதேசத்திற்கு சரியான கருத்தினை முன்வைக்க முடியாது போய்விட்டது.
இதற்கான தீர்வுதான் என்ன?
முஸ்லிம் தலைமைகளையும் கட்சிகளையும் ஒருகட்சி குடைக்குள் கொண்டுவரமுடியாதென்பது யதார்த்தமானதே. ஆனால் இக்கட்சிகளின் தோழ்விநிலையினை போக்கி கொள்ளவும் மக்களிடத்தில் தம்மை தலைவர்களாக காட்டிக்கொள்வதற்கும் மாற்றீடுகளை இம்முஸ்லிம் அரசியல் தலைமைகள் செய்தாகவே வேண்டும் என்பது நங்கு விழங்கி கொள்ளப்பட்ட ஒன்று. அமைச்சர் ஹகீமின் அறைகூவலும் அமைச்சர் றிஷாட்டின் அறிக்கைகளும் இதற்கான சமிஞைகளாக எடுத்துக்கொள்ளப்பட்டாள் நன்றாக அமையும். இத்தலமைகள் முஸ்லிம்களது தற்கால சூழ்நிலை கருதி பொதுவான விடயங்களில் கூட்டாக செயற்படவேண்டியது காலத்தேவையாகும். பல்லினம் வழுகின்ற ஒருநாட்டிலே சிருபான்மையாக வாழுகின்ற இனக்குழுக்கள் இவ்வாரான பொதுவான நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் தமது இருப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்திக்கொள்கின்றதை நாம் அவதானிக்க முடியும்.

பௌத்த நாடான மியன்மாரில் (முன்னர் பர்மா) முஸ்லிம் சிறுபான்மை அரசியல் நகர்வு ஆரம்பத்தில் இலங்கை முஸ்லிம் அரசியல் சாயலை கொண்டிருந்ததை கான்கின்றோம். தீவிர பௌத்த வாதத்தினால் முஸ்லிம்கள் அடக்கியொடுக்கப்பட்ட போது பர்மா முஸ்லிம் காங்கிரஸ் இடதுசாரிகளுடன் கைகோர்த்து பல்லின அங்கீகாரம் கொண்ட ஒரு ஆட்சியை அமைத்து நீதி அமைச்சினையும் பெருமளவுக்கு திட்டமிடல் கானப்பட்டது. எவ்வாறு முஸ்லிம் காங்கிரசின் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் கொள்ளப்பட்டபின்னர் பிளவுகள் தோன்ற ஆரம்பித்தது போன்று அங்கும் பர்மா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அரசியல் படுகொலை செய்யப்படுகின்றார். என்ற போதும் பர்மாவின் சிருபான்மைக்கட்சிகள் சேர்ந்து யுடட டீரசஅய ஆரளடiஅ ருnழைn என்ற கூட்டணிக்குள் தமது அரசியல் உரிமைப்போராட்ட ஒழுங்கினை கொண்டு சென்றதை கானமுடிகின்றது. இவ்வாரே மிகமோசமான முஸ்லிம் இன சுத்திகரிப்பு படுகொலை இடம்பெற்ற குரேஷியாவில் 7.5மூ வாழ்ந்த சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் தமது இறுப்பை தக்க வைத்துக்கொள்ள கூட்டணி அமைத்து தமது உரிமகளை பெற்றுக்கொண்டமையும், பல்கேரியாவில் மிக மோசமாக இனச்சுத்திகரிப்புக்குள்ளாக்கப்பட்டு நாட்டைவிட்டும் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் உரிமைக்கும் சுதந்திரத்துக்குமான இயக்கத்தினை (ஆசுகு) அமைத்து அதனூடாக 16மூ முஸ்லிம்களையும் அரசியல் விடிவை நோக்கி நகர்த்தி வெற்றியடைந்ததினையும் இங்கு மீட்டிப்பார்க்கமுடியும்.
இவ்வாறு மசிடோனியா, கொசோவோ, ஐரிஷ் போன்ற பல்வேறு சிருபான்மை மக்கள் கொண்ட நாடுகளின் அரசியல் போராட்ட ஒழுங்கினடிப்படையில் தமக்குள் பல்வேறு அரசியட்கட்சிகள் இருந்த போதும் பொதுவான நிகழ்ச்சி நிரலின் கீழ் சமூகத்தை வழிநடாத்தியதை அவதானிக்க முடியும்.
இத்தகைய பிண்ணனியில் முஸ்லிம் சமூகம் தமது கட்சித்தலைமகளுக்கு அழுத்தக்குழுவாக செயற்படவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ளவேண்டும். குறிப்பாக சிறுபானமை அரசியல் பின்ணனி, முஸ்லிம் சமூகம் பற்றிய முழுமையான பார்வை கொணடவர்களை தமது அரசியல் பிரதிநிதிகளாக ஆக்கிக்கொள்ளவேண்டியது காலத்தின் கடமைப்பாடாக முஸ்லிம் சமூகம் உணரவேண்டும். மீண்டும் சுயநல அரசியல் சிந்தனைக்குள்ளும், குறுநில அரசியல் பகுப்பு வாதம் பேசும் முல்லாக்களுக்கும் தெளிவான செய்தியினை முஸ்லிம் சமூகம் எடுத்துச்சொல்ல வேண்டிய கடமையினை தவரவிடும் பட்சத்தில் இலங்கை முஸ்லிம்கள் இன்று இருப்பதினை விட மோசமான பின்விளைவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். புளம்பெயர் முஸ்லிம் சமூகம் முஸ்லிம் அரசியல் குறித்து ஆக்கபூர்வமான களந்துறையாடல்களை மேற்கொள்வதுடன் உள்நாட்டில் தாம் சார்ந்த தளங்களில் புதிய அரசியல் மற்றங்கள் ஒழுங்குகள் பற்றி தாக்க கருத்துக்களை விளங்கவைக்க வேண்டிய கடமைப்பாடும் உள்ளது.
எனவே எதிர்கால அரசியல் என்பது நல்ல சிந்தணாப்பாரம்பரியம் கொண்டவர்களின் தேவைப்பாட்டுடன் காணப்படுவதனை இப்போதைய நிகழ்வுகள் தெளிவுபடுத்துவதுடன் முஸ்லிம் புத்திஜீவிகள் இதற்கான அரசியல் கலத்தினை ஏற்படுத்தி கொடுப்பது சிறந்ததாக அமையும்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts