உயிர் தியாகிகளின் அன்னை’ என்றழைக்கப்படும் ஃபலஸ்தீன் விடுதலைப் போராளியும், பாராளுமன்றஉறுப்பினருமான மர்யம் ஃபர்ஹாத்(வயது 64)மரணமடைந்தார்.(Mar 17, 2013) ஞாயிற்றுக் கிழமைகாலை காஸ்ஸா மருத்துவமனையில் வைத்து அவரது மரணம் நிகழ்ந்தது. நுரையீரல் மற்றும்சிறுநீரக பாதிப்பால் சிகிட்சைப் பெற்றுவந்தார் மர்யம்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தில் முன்னணி போராளியான மர்யம் தனது தீரமிக்க உரைகளின் மூலம் ஃபலஸ்தீன் மக்களின் உள்ளங்களில் விடுதலைப் போராளியாக நீங்கா இடம் பிடித்துள்ளார். 17 வயது மகனை இஸ்ரேலியர்களை கொலைச் செய்ய போர்க்களம் அனுப்பியதன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தார் மர்யம் ஃபர்ஹாத்.

2002-ஆம் ஆண்டு இவரது மகன் முஹம்மது ஃபத்தாஹ் நடத்திய தாக்குதலில் 5இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். ஆறு பிள்ளைகளில் 3 பேர் இஸ்ரேலுடன் நடந்த போராட்டத்தில் உயிர்தியாகி ஆனார்கள் ஒரு மகன் 11 ஆண்டுகள் இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தனது மகன்கள் கொல்லப்பட்ட வேளையில்; “எனது மகன்கள் உயிர் தியாகிகளாக மாறியதில் நான் அபிமானம் கொள்கிறேன்” என்று மர்யம் ஃபர்ஹாத்தின் பதில் அமைந்தது,

2005-ஆம் ஆண்டு செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் மர்யம் ஃபர்ஹாத் “அப்பாவிகளை கொலைச் செய்ய இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஆனால், இஸ்ரேலிகளுக்கு தயவு கிடையாது. நாங்கள் அனுபவிப்பது அல்ல சமாதானம். நாங்கள் விரும்பும் சமாதானம் என்பது அனைத்து ஃபலஸ்தீன் மக்களின் சுதந்திரமாகும். ஜோர்டான் நதி முதல் மத்திய தரைக்கடல் வரையிலான ஃபலஸ்தீனின் சுதந்திரம். அவர்களுக்கு(இஸ்ரேல்) சமாதானம் தேவையென்றால் இதற்கு அவர்கள் தயாராக வேண்டும்சுதந்திர ஃபலஸ்தீனின் கீழ் அவர்கள் அமைதியாக வாழலாம். இந்த சுதந்திரம் கிடைக்கும் வரையில் நாங்கள் போராட்டக் களத்தில் இருந்துபின்வாங்கமாட்டோம்.” இவ்வாறு கூறினார்.

‘உம்மு நிதால்’ ‘ஃபலஸ்தீனின் கன்ஸா’ போன்ற புனைப்பெயர்களில் ஃபலஸ்தீனில் பிரபலமானவர் மர்யம் ஃபர்ஹாத். ஃபலஸ்தீன் பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா மற்றும் உயர் ஹமாஸ் தலைவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் மர்யம் ஃபர்ஹாத்தின் இறுதிச் சடங்கில்பங்கேற்றனர். மர்யமின் மரணம் குறித்து ஹமாஸ் தலைவர்கள் இரங்கல் செய்திவெளியிட்டுள்ளன.

இந்த அன்னையின் வாழ்கையில் அனைத்து தாய்மார்களுக்கும் நிறையவே படிப்பினைகள் உள்ளன ஒரு தாய் எப்படி இருக்க வேண்டும் என்பதற்க்கு மர்யம் அவார்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts