சவூதி
அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண்ணொருவரை அங்குள்ள குறித்த
வீட்டு எஜமான் நிர்வாணப்படுத்தி கைத்தொலைபேசியில் படமெடுத்துள்ள
சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
வீட்டு எஜமானின் தாக்குதல் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு
உள்ளாகியுள்ள குறித்த பெண் தற்போது நாடு திரும்பியுள்ள நிலையில் கராபிட்டிய
வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
காலி, கந்துகொட, லுனுவிலவத்த பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய முஸ்லிம்
பெண்ணொருவரே இவ்வாறான துன்புறுத்தல்களுக்கு உள்ளான நிலையில் நாடு
திரும்பியுள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14
ஆம் திகதி மருதானையில் உள்ள முகவர் நிறுவனம் ஒன்றினூடாக சவூதிக்கு
வேலைவாய்ப்பிற்காக சென்றுள்ள இவர் எஜமானின் வீட்டிலிருந்து தப்பிச்சென்று
அங்குள்ள பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்தே கடந்த 6 ஆம்
திகதி அங்கிருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: