மத்திய
கிழக்கு நாடுகளுக்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த 88 இலங்கையர்கள் இன்று
திங்கட்கிழமை அதிகாலை திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய
செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ள அதேவேளை, பல்வேறு காரணங்களால் இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குவைத்திலிருந்து 72 பெண்களும் சவூதியிலிருந்து 16 ஆண்களுமே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களாவர்.
இவர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பெறுப்பெடுத்து அவர்களின் பயணத்திற்கு தேவையான பணத்தினை வழங்கி அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.

0 கருத்துகள்: