இலங்கையில் அல்கைதா மற்றும் ஜிஹாத் குழுக்கள் செயற்படுவதாகவும் இதற்கு ஜம்மியதுல் உலமா சபையினூடாக இவ்வமைப்புக்கள் ஊடுருவுவதாக பொது பல சேனாவின் தலைவர் கிரம விமல ஜோதி தேரர் தெரிவித்துள்ளதாக உதயன் பத்திரிகை செய்தியினை வெளியிட்டுள்ளது.

வேதாளம் முருங்கை மரம் ஏறியதான கதையாக மீண்டும் பொது பல சேனா செயற்படுகின்றதோ என என்னத்தோன்றுகின்றது.

அமெரிக்க இணையத்தளமான WING இனை ஆதாரமாக காட்டி இச்செய்திகள் வெளியாகியுள்ளன.

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் முயற்சியில் இதுவும் ஒரு அங்கம் என்பது எவரும் அறிந்த விடயமாகும். WING இன் அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இக்குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் FBI இன் புலனாய்வு அதிகாரி இக்குண்டு வெடிப்பில் அராபியர்களின் பெயர்களை சாடுவது பொருத்தமற்றது என குறிப்பிட்டுள்ளனர்.

இக்குண்டு வெடிப்பு இடம்பெற்ற போது ஈரானைத் தாக்குவதற்கான அடுத்த கட்ட நகர்வு மேற்கொளப்பட்டு விட்டதா என்று நாம் யோசித்துக்கொண்டிருந்த வேளை ஈரான் இவ்வாரான தாக்குதல் தொடர்பில் அமெரிக்காவுக்கு தகவல் பறிமாற்றம் செய்திருந்ததாக WING செய்தி நிருவனம் தகவல்வெளியிட்டுள்ளது.. இதில் இரண்டு விடயங்களை நோக்க வேண்டியுள்ளது.

ஈரான் தம்மீது வீணான குற்றம் அமெரிக்காவால் சுமத்தப்படும் என்பதற்கு முன்னதாகவே இக்குண்டு வெடிப்பு தொடர்பாக அமெரிக்காவின் பாதுகாப்பு பிரிவு தவறு விட்டிருக்கின்றது என்று முந்தியடித்துக்கொண்டு கருத்து வெளியிட்டிருக்க முடியும்.

அதே போல் ஈரானைத் தாக்குவதற்கு முன்னர் முஸ்லிம் உலகைவிட்டும் ஈரானை தனிமைப்படுத்துவதற்காக ஈரான் முஸ்லிம்களை காட்டிக்கொடுக்கின்றது என்ற கருத்தை முஸ்லிம்கள் மத்தியில் விதைப்பதற்கான முயற்சியாகவும் கருத வேண்டியுள்ளது.

இம்முறை தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் மீது கவனக்குவிப்பு செய்யப்படும் என்ற எதிர்பார்பிற்கு மாற்றமாக வஹ்ஹாபிசம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே நவீன கால இஸ்லாமிய எழுச்சிகளை நசுக்குவதற்காக இன்று மேற்கு உலகம் கையாளும் புதிய பதமாக இஸ்லாமிய தீவிரவாதம் அல்லது வஹ்ஹாபிசம் என்ற பதப்பிரயோகம் பயன்படுத்தப்படுகின்றது.

இவர்களது பார்வையில் வஹ்ஹாபிசம் என்பது நவீன கால இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தையுமே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறுமுஸ்லிம்களை, கூறு போட்டு தாக்குதல் நடத்தும் யுக்தியை மேற்கு உலகம் கச்சிதமாக காய் நகர்த்தல்களை செய்கின்றதோ என என்னத்தோன்றுகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டுதான் பொது பல சேனாவின் மரபு முஸ்லிம்கள், வஹ்ஹபிகள் என்ற சொற்பிரயோகங்கள் அமைந்திருப்பதனை அவதானிக்க முடிகின்றது.

பொட்ரன் நகர குண்டுத்தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் மூலம் ஆரம்பத்தில் சவூதி பிரஜை ஒருவர் மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்டு பின்னர் அது பிழையான தகவல் என அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கருப்பின மக்கள் மீது கவனம் செழுத்தப்படுகின்றது.

இதேவேளை இத்தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நிபுணர்கள் அமெரிக்காவில் நடந்த பல்வேறு தாக்குதல்களின் பின்னணியில் அமெரிக்கர்களும் அமெரிக்காவில் இயங்கிவரும் சுஐபுர்வுளு-WING குழு காரணமாக இருக்க முடியும் என குறிப்பிடுகின்றனர்.

அதே போன்று குண்டு வெடிப்பு நிகழ்ந்த நாள் இஸ்ரேலின் யுத்த வீரர்கள் நினைவு நாளாகும். எனவே முழு தேசமும் இதனை அநுஷ்டிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாரான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் இக்குண்டு வெடிப்புக்கான காரணம் உறுதிப்படுத்த முடியாத நிலையில் பொது பல சேனா மீண்டும் முஸ்லிம்களை குறிவைப்பதுவேதனைக்குறியதே.

WING இன் செய்தியினை உறுதிப்படுத்த ஈரான் இது தொடர்பில் எவ்வித உத்தியோக பூர்வ அறிக்கைகளும் வெளியிடவும் இல்லை.

இது இவாறிருக்க, அண்மைக்காலமாக பொது பல சேனாவின் பின்னணியில் ஈரான் சார்பு ஷீயாக்கள் காணப்படுவதாக சில தகவல்கள் வெளிவந்திருந்தன.

குறிப்பாக ரஷ்யாவில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இலங்கையர் இதற்கு கூடுதல் பங்களிப்பு செய்தனர் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. எனவே ஒசாமா பின் லாடன் போன்று அமெரிக்கா கையாளும் கருவியாக ஈரான் இருக்கின்றதோ என கருத தோன்றுகின்றது.

மறுபுறம், பொது பல சேனா கண்மூடித்தனமான பொய் பிரளிகளை அவிழ்த்து விட்டு நாட்டின் பாதுகாப்புக்கும் இன நல்லுறவுவுக்கும் வேட்டுவைக்க முனைவதை தடுத்து நிருத்த வேண்டும்.

பாதுகாப்பு செயளாலர் அமெரிக்காவின் மீதுள்ள கடுப்பினால் பொதுபல சேனாவினூடாக அமெரிக்காவில் குண்டு தாக்குதலை நடாத்த முற்பட்டார் என போலியான வாதங்களை தோற்றுவிப்பது போன்றதாகவே ஜம்மியதுல் உலமா மீதான பொது பல சேனாவின் கருத்து அமைந்திருக்கின்றது. யூகங்களும் பொய்களும் சமூகங்களை பிழையாக வழிநடாத்த அனுமதிக்க முடியாது.

அப்பாவி சிங்கள சகோதர சமூகத்தை ஏமாற்றி பிழைப்பு நடாத்தும் இந்த கொள்ளைக் கும்பல் பற்றி சிங்கள சமூகம் விழிப்படைந்து காணப்படுகின்றது.

எனவே எதிர்காலத்தில் இவ்வாரான போலியான கருத்துக்களை வெளியிடும் இத்தகைய கயவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய பொருப்பு ஒவ்வொரு இலங்கையரையும் சார்ந்ததாகவே அமைகின்றது

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts