டுபாயில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்கள்
கொலையுண்டவரின் உறவினர்களுக்கு நட்ட ஈடு வழங்க இணக்கம் காணப்பட்டதை அடுத்து
விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் இன்று இந்தியா வர உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.துபாயில்
கடந்த 2009ஆம் ஆண்டு , ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானைச் சேர்ந்த மிஸ்ரிகான்
என்பவரை கொலை செய்ததாக , 17பேர் மீது டுபாய் பொலிசார் வழக்குப்பதிவு
செய்தனர். இதில் 16 பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர்
டில்லியைச்சேர்ந்தவர். இவர்களுக்கு டுபாய் நீதிமன்றம் கடந்த 2010ஆம்
ஆண்டு ஆகஸ்ட் மாதம் மரண தண்டனைவிதித்து தீர்ப்பளித்தது.இந்நிலையில்
எஸ்.பி.சிங்ஒபராய் என்ற டுபாயைச் சேர்ந்த தொழிலதிபர் வாயிலாக,
நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த பேச்சுவார்த்தையில், கொலையுண்ட
பாகிஸ்தானியரின் குடும்பத்தினருக்கு ரூ. 5.03 கோடி இழப்பீடு வழங்க சம்மதம்
தெரிவிக்கப்பட்டதை அடுத்து , அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம்
அறிவித்தது. இதையடுத்து 17 இந்தியர்களும்
விடுவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாகவும்,
இன்று விமானம் மூலம் இந்திய வர உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் பஞ்சாப் சென்று பொற்கோவிலில் தங்களது உறவினர்களை சந்திக்கின்றனர்.
டுபாயில் மரணத்தின் வாசலை தொடும் நிலைக்கு சென்ற இவர்கள் மூன்று
ஆண்டுகளுக்குபின்னர் தங்களது உறவினர்களை சந்திக்கின்றனர். இதனை
விடுதலைக்காக பாடுபட்ட டுபாயைச்சேர்ந்த எஸ்.பி.சிங் ஒபராய்
தெரிவித்துள்ளதாக இந்த்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
புதன், 13 பிப்ரவரி, 2013
0 கருத்துகள்: