ஸ்ரீநகர்:அப்ஸல்
குருவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றப்போவதாக தெரிவிக்கும் தகவலை அனுப்பிய
ஸ்பீட் போஸ் நேற்று தான் அவரது குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது. மத்திய
உள்துறை அமைச்சகம் அப்ஸலின் மனைவி தபஸ்ஸுமிற்கு ஸ்பீட் போஸ்டில் அனுப்பிய
கடிதத்தை நேற்று அப்ஸலின் சகோதரர் இஜாஸ் பெற்றுக்கொண்டார்.
சனிக்கிழமை காலை 8 மணிக்கு அப்ஸலை திகார் சிறையில் தூக்கிலிட்டதாக மத்திய
உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. சம்பவம் நடந்து 3 தினங்கள் கழித்து
அவரது குடும்பத்தினருக்கு மரண தண்டனையை நிறைவேற்றப்போவதை தெரிவிக்கும்
கடிதம் ஸ்பீட் போஸ்ட் வழியாக கிடைத்துள்ளது. கடிதத்தை பெற முதலில்
தயங்கினாலும், கடிதத்தின் உள்ளடக்கத்தை அறிவதற்காக பெற்றுக்கொண்டதாக இஜாஸ்
தெரிவிக்கிறார்.
ஸ்ரீநகரில் உள்ள அப்சல் குருவின்
குடும்பத்தினருக்கு மரண தண்டனையை நிறைவேற்றப்போகும் தகவலை தெரிவித்து
விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே மரண தண்டனை
நிறைவேற்றப்பட்ட பிறகு கூறியிருந்தார். ஆனால், மரண தண்டனை நிறைவேற்றப்போவது
குறித்து தெரிவிக்கவில்லை என்றும், அப்ஸல் குருவை காண வாய்ப்பளிக்கவில்லை
எனவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர்.
ஊடகங்கள்
மூலமாகத்தான் குடும்பத்தினர் அப்ஸல் குருவுக்கு மரணத் தண்டனையை
நிறைவேற்றப்பட்டது குறித்து அறிந்துள்ளனர். அதே வேளையில் போஸ்ட் ஆபிஸில்
கடிதம் வந்ததாகவும், ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் கடிதத்தை அளிக்க
காலதாமதம் ஏற்பட்டது என்று அதிகாரிகள் விளக்கமளிக்கின்றனர்.
தூது இணையத்தளம் : http://www.thoothuonline.com/
தூது பேஸ்புக் : http://www.facebook.com/ThoothuOnline
ஸ்ரீநகர்:அப்ஸல்
குருவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றப்போவதாக தெரிவிக்கும் தகவலை அனுப்பிய
ஸ்பீட் போஸ் நேற்று தான் அவரது குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது. மத்திய
உள்துறை அமைச்சகம் அப்ஸலின் மனைவி தபஸ்ஸுமிற்கு ஸ்பீட் போஸ்டில் அனுப்பிய
கடிதத்தை நேற்று அப்ஸலின் சகோதரர் இஜாஸ் பெற்றுக்கொண்டார்.
சனிக்கிழமை காலை 8 மணிக்கு அப்ஸலை திகார் சிறையில் தூக்கிலிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. சம்பவம் நடந்து 3 தினங்கள் கழித்து அவரது குடும்பத்தினருக்கு மரண தண்டனையை நிறைவேற்றப்போவதை தெரிவிக்கும் கடிதம் ஸ்பீட் போஸ்ட் வழியாக கிடைத்துள்ளது. கடிதத்தை பெற முதலில் தயங்கினாலும், கடிதத்தின் உள்ளடக்கத்தை அறிவதற்காக பெற்றுக்கொண்டதாக இஜாஸ் தெரிவிக்கிறார்.
ஸ்ரீநகரில் உள்ள அப்சல் குருவின் குடும்பத்தினருக்கு மரண தண்டனையை நிறைவேற்றப்போகும் தகவலை தெரிவித்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு கூறியிருந்தார். ஆனால், மரண தண்டனை நிறைவேற்றப்போவது குறித்து தெரிவிக்கவில்லை என்றும், அப்ஸல் குருவை காண வாய்ப்பளிக்கவில்லை எனவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர்.
ஊடகங்கள் மூலமாகத்தான் குடும்பத்தினர் அப்ஸல் குருவுக்கு மரணத் தண்டனையை நிறைவேற்றப்பட்டது குறித்து அறிந்துள்ளனர். அதே வேளையில் போஸ்ட் ஆபிஸில் கடிதம் வந்ததாகவும், ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் கடிதத்தை அளிக்க காலதாமதம் ஏற்பட்டது என்று அதிகாரிகள் விளக்கமளிக்கின்றனர்.

தூது பேஸ்புக் : http://www.facebook.com/
0 கருத்துகள்: