சவுதி அரேபியாவிலுள்ள வீடொன்றினுள் 20 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண் தொடர்பில் உங்கள் நண்பன் பொலிஸ்க்கு தகவல் கிடைத்துள்ளது.
கிண்ணியா அயிலியடி பிரதேசத்தைச் சேர்ந்த அம்சா உம்மா என்ற பெண்ணே சவுதி அரேபியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1992ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி அவர் தனியார் முகவர் நிலையமொன்றின் ஊடாக தொழில் வாய்ப்பிற்காக சவுதி அரேபியாவிற்குச் சென்றுள்ளார்.
சவுதி அரேபியாவின் ஜிசான் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் அம்சா உம்மா தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவரது மகன் தெரிவித்தார்.
தமது தாய் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடம் முறைப்பாடு செய்துள்ள போதிலும் இதுவரை எந்தவொரு அதிகாரியும் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரன்தெனியவிடம் வினவியபோது, குறித்த பணிப்பெண் தொடர்பில் ஆராய்வதாக உறுதியளித்தார்.
0 கருத்துகள்: