இலங்கையில் முஸ்லிம்களுக்கு நீண்டகால வரலாறு கிடையாது என தெரிவித்த பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு நீண்ட வரலாறு உள்ளதாக எழுதப்பட்டுள்ளவை அனைத்தும் திரிவுபடுத்தப்பட்டவை என்றார்.

நேற்று முன்தினம் இரவு முஸ்லிம் பிரதிநிதிகள் சிலருடனான தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் தற்போது ஏற்பட்டுள்ள ஹலால் சான்றிதழ் தொடர்பான பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதை நோக்காகக் கொண்ட நடத்தப்பட்ட குறித்த விவாதத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு 1300 வருட காலம் கொண்ட ஒரு நீண்ட வரலாறு உள்ளதாகக் கூறுகிறார்கள். அது சுத்தப் பொய். 1996 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியின் போது வரலாற்றை திரிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போதே அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு போன்ற முஸ்லிம்களின் திரிவுபடுத்தப்பட்ட வரலாற்றும் புத்தகங்கள் வெளியாகின.

இது ஒரு பெரும்பான்மை பெளத்த நாடு. ரப்பர் தோட்டத்தில் பிரதானமானது இறப்பர். எனினும் அங்கு மரக்கறி, கீரை வகைகளும் இடை நிலை பயிராக பயிரிடப்படும். அவ்வாறுதான் இங்குள்ள சிறுபான்மையினர் அதனை உணர்ந்து முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டும்.

நாட்டில் இன்று பிரதான பிரச்சினை ஹலால். எனினும் அது தொடர்பில் இன்று (நேற்று முன்தினம்) கதைப்பதற்கு ஜம்மியத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள் எவரும் இங்கு வராமை ஏமாற்றமளிக்கிறது. சந்தேகமொன்று ஏற்படின் அதனை பேசித் தீர்க்க வேண்டும். ஜம்மியத்துல் உலமா சபையூடாகவே நாட்டில் அடிப்படை வாதம் வளர்க்கப்படுகிறது. நாட்டில் முஸ்லிம்களால் பிரிவினைவாதம் தூண்டப்படுகிறது.

எங்களுக்குள்ள பிரச்சினை ஹலாலே இதனை உலமா சபையே ஏற்படுத்தியது. உலமாசபைக்கு ஹலால் சான்றிதழ் விவோகிக்க எவ்விதமான உரிமையும் கிடையாது.

தாய்லாந்து, மலேசியா, ஆப்கானிஸ்தான் போன்றன பெளத்த நாடுகள். அவற்றை எவ்வாறு ஆக்கிரமித்தார்களோ அதேபோன்று இலங்கையையும் ஆக்கிரமிக்க இடமளிக்க முடியாது. இங்கு ஸலபி- வஹாபி அடிப்படை வாதம் ஒன்று நிலவுகிறது. இவர்கள் சிங்கள, தமிழ் மக்களை இஸ்லாத்துக்கு மதமாற்றுகின்றனர். இதற்காக வேண்டி மத்திய கிழக்கிலிருந்து இவர்களுக்கு நிதி கிடைக்கிறது என்றார்.

இதேவேளை, குறித்த குற்றச்சாட்டுக்களையும் கருத்துக்களையும் முற்றாக மறுத்த முஸ்லிம் தரப்பு, வஹாபி ஸலபி என்ற ஒரு பிரச்சினை இலங்கையில் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தது. அத்துடன் ஹலால் சான்றிதழ் நிதியானது எங்கும் போகவில்லையென தெரிவித்த முஸ்லிம் தரப்பு, தாம் எவரையும் ஹலாலின் நிமித்தமோ, தமது மதத்தை பின்பற்றவோ வற்புறுத்தவில்லை என தெரிவித்தது.

அத்துடன் பொதுபல சேனாவின் குற்றச்சாட்டுக்கள் அபத்தமானது என்பதை சுட்டிக் காட்டியதுடன் உலமா சபை மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் தாங்களே அவர்களுக்கு எதிராக செயல்படுவோம் எனவும் முஸ்லிம் பிரமுகர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் நீண்ட கால வரலாறு கிடையாது - பொதுபலசேனா 

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய

Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts