இலங்கைக்கான
சவூதி அரேபிய தூதுவரான அப்துல் அஸீஸ் அல் ஜம்மாசை சவூதி அரேபிய அரசு மீள
அழைத்துள்ளமையானது இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் இனவாத
செயற்பாடுகளுடன் தொடர்புடையது என நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய மூதூரை சேர்ந்த ரிசான
நபீகிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சவூதி
அரேபியாவிற்கான இலங்கை தூதுவராக கடமையாற்றிவந்த அஹமட் ஜவாத் இலங்கை
அரசாங்கத்தினால் மீளழைக்கப்பட்டார்.எனினும் பதவிக்காலம் முடிவடைந்ததனாலேயே
தான் திருப்பியழைக்கப்பட்டதாக ஜவாத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே ஜவாதின் மீழளைப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ்
திருப்பியழைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன.
எனினும் சவூதி அரேபியாவானது தூதுவரை திருப்பி அழைத்தமைக்கு அது காரணம் கிடையாது என தற்போது தெரியவருகிறது.
அண்மைக்காலமாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னடுக்கப்படும்
நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே சவூதி தனது தூதுவரை மீள
அழைத்துள்ளது. ஏனெனில் குறித்த முஸ்லிம் எதிர்ப்புச்செயற்பாட்டாளர்கள்
இலங்கையில் வஹாபி, சாலபி என்ற அடிப்படைவாத பிரச்சினைக் காணப்பட்புவதாகவும்
குறித்த அடிப்படைவாத பிரச்சினைக்கு சவூதி அரேபியா நிதி உள்ளிட்ட உதவிகளை
செய்வதாக குற்றம் சுமத்தியிருந்தது.
இந்நிலையில் இவ்வாறான தவறான
புரிதல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிடவே சவூதி
தனது தூதுவரை மீள அழைத்ததாக தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கான
சவூதி அரேபிய தூதுவரான அப்துல் அஸீஸ் அல் ஜம்மாசை சவூதி அரேபிய அரசு மீள
அழைத்துள்ளமையானது இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் இனவாத
செயற்பாடுகளுடன் தொடர்புடையது என நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய மூதூரை சேர்ந்த ரிசான நபீகிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவராக கடமையாற்றிவந்த அஹமட் ஜவாத் இலங்கை அரசாங்கத்தினால் மீளழைக்கப்பட்டார்.எனினும் பதவிக்காலம் முடிவடைந்ததனாலேயே தான் திருப்பியழைக்கப்பட்டதாக ஜவாத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே ஜவாதின் மீழளைப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ் திருப்பியழைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன.
எனினும் சவூதி அரேபியாவானது தூதுவரை திருப்பி அழைத்தமைக்கு அது காரணம் கிடையாது என தற்போது தெரியவருகிறது.
அண்மைக்காலமாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே சவூதி தனது தூதுவரை மீள அழைத்துள்ளது. ஏனெனில் குறித்த முஸ்லிம் எதிர்ப்புச்செயற்பாட்டாளர்கள் இலங்கையில் வஹாபி, சாலபி என்ற அடிப்படைவாத பிரச்சினைக் காணப்பட்புவதாகவும் குறித்த அடிப்படைவாத பிரச்சினைக்கு சவூதி அரேபியா நிதி உள்ளிட்ட உதவிகளை செய்வதாக குற்றம் சுமத்தியிருந்தது.
இந்நிலையில் இவ்வாறான தவறான புரிதல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிடவே சவூதி தனது தூதுவரை மீள அழைத்ததாக தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: