நிலத்தை இழந்து வரும் ஒருகிராமத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? ஆம் வேறெங்கும் இல்லை. அது தென்கிழக்கின் தலைநகரமாக ஒருகாலத்தில் காலஞ்சென்ற முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவருமான அல்ஹாஜ். எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களால் எதிர்வுகூறப்பட்டதாகக் கூறப்படுகின்ற கிரமமான ஒலுவிலுக்குத்தான் இந்நிலமை ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

ஒலுவில் துறைமுகம் கட்டுமானப்பணிகள் ஆரம்பித்தன் பின்னர் இன்றுவரை ஒலுவில் கடற்கரையானது கரையை நோக்கி பல நூற்றுக்கும் மேற்பட்ட மீற்றர்கள் கடல்நீர் உள்ளே வந்து நிலத்தை அபகரித்துவிட்டது. பல ஆயிரக்கணக்காண தென்னை மரங்களும், பெறுமதியான நிலமும், மீனவர்களின் வாடிவீடுகளும் கடலால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வெளிச்ச வீடும் கடலுக்குள் சென்றுவிடும் அபாயம் தோன்றியுள்ளதாக அங்குவாழ் மீனவர்கள் கூறுகின்றனர்.

தென்கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு கடந்த வாரம் வருகை தந்திருந்த நாட்டின் ஜனாதிபதி அவர்களிடம் இவ்விடயம் கூறப்பட்டதாகவும் ஜனாதிபதி இதற்கான தீர்வை விரைவில் எடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தாலும் இந்நடவடிக்கை விரைந்து தீர்வு காணப்படவேண்டிய முக்கிய விடயம் என்பது மட்டும் உண்மையாகும். நாளாந்தம் அடிக்கணக்கில் நிலம் நீராக மாறிவருகின்றது.

கழியோடை எனும் ஆறும் ஒலுவில் கடற்கரையில் சங்கமிக்கின்றது. தற்போது அந்த ஆற்றின் பெரும்பகுதியை கடல்நீர் ஆட்கொண்டதனால் ஆற்றின் கரையோரமுள்ள நெற்காணிகள் நெற்செய்கை பண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயி ஒருவர் தெரிவித்தார். ஒலுவில் தென்கிழக்;;குப் பல்கலைக்கழகம், ஒலுவில் மகாபொல மத்தியநிலையம், விருந்தினர் இல்லம் மற்றும் ஒலுவில் துறைமுகம் போன்றன எதிர்காலத்தில் இந்தக் கடலரிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படலாம் எனவும் மீனவர்கள் கூறுகின்றனர்.

கடலரிப்புக்கு காரணமாக அமைந்த காரணிகள் ஒருபுறமிருக்க நிலத்தை பாதுகாக்கும் முன்திட்டமாக கடலுக்குள் பாரிய பாறாங்கற்களைப் போட்டு கடலரிப்பை தடுக்கலாம் என்கிற எண்ணத்தில் கடலுக்குள் அதாவது கரையிலிருந்து சுமார் 100மீற்றருக்கும் அப்பால் பாரிய கற்பாறைகள் துறைமுகத்தின் வடக்குப் பக்கமாக மூன்று தடுப்புச் சுவர்கள் கடந்தாண்டு அமைக்கப்பட்டன.

அமைக்கப்பட்டமையினால் கடலரிப்பு குறைவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் தற்போது அதிகளவு கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர் ஒன்றைக்கூட பலமான கடலலையின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது சரிந்துபோகக் கூடிய நிலையில் காணப்படுவதாகவும் கடலுக்குள் செல்லும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான ஒருநிலையில் தென்னையையும், நிலத்தையும் இழந்துபோன ஒலுவில் மக்களுக்கான நஷ்ட ஈடுகள் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை என்பதுடன், நாளாந்தம் மீன்பிடித்தொழில் ஈடுபடும் மீனவர்களுக்கும் இது பெரிய தொழில் நஷ்டத்தை ஏற்படுத்தியும் வருகின்றது.

அவர்களுக்கும் தொழில் ரீதியான நஷ்டஈடுகள் இதுவரை கிடைக்கவில்லை.
கடந்தவாரம் ஒலுவில் பிரதேசத்திற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த நமது ஜனாதிபதியின் கவனத்திற்கு இவ்விடயம் எத்திவைக்கப்பட்டு அதற்கான தீர்வினை காண்பதற்கான ஒரு முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக ஜனாதிபதி கூறியதாகவும் அமைச்சர் அதாஉல்லா தெரிவித்தாக செய்திகள் கூறுகின்றன.

உங்கள் நண்பன் பொலிஸ்

எதுஎப்படி இருப்பினும் அபிவிருத்திகள் மேற்கொள்கின்றபோது அங்கே ஏற்படப்போகின்ற பாதிப்புக்களையும் கவனத்திற்கொள்ள வேண்டியதன் அவசியம் ஒலுவில் துறைமுக அபிவிருத்தியில் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இழந்த நிலத்தை எக்காரணம்கொண்டும் பெற்றுக் கொள்ள முடியாது. இருக்கின்ற நிலத்தையாவது தக்கவைப்பதற்கான ஒரு நிலைமைய உடனடியாக எடுக்க வேண்டியது அனைவரினதும் தார்மீகக் கடமையாகும்.

கடலரிப்பினால் நிலத்தை இழந்து தவிக்கும் ஒலுவில் கிராம மக்கள்! 

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய

Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts