பல்வேறு
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 68 இலங்கையர்கள் கட்டாரில் சிறைத்தண்டனை
அனுபவித்து வருவதாக கட்டாருக்கான இலங்கைத் தூதரகம் தெரிவிக்கின்றது.
இந்த இலங்கையர்களில் நான்கு பெண்கள் அடங்குவதாக தூதரகத்தின் தொழிலாளர்
நலன்புரி உத்தியோகத்தர் ஒருவர் உள்ளூர் செய்திச்சேவை ஒன்றிடம்
தெரிவித்துள்ளார்.
ஏனைய 64 ஆண்களில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையின் இளைஞர் ஒருவரும் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே தூதரக அதிகாரிகளிடமிருந்து தமக்கு தேவையான உதவிகள்
கிடைப்பதில்லை என கட்டார் மத்திய சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து
வருகின்ற இலங்கையர்கள் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும்
இலங்கை கைதிகள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால்
அதில் தலையிடுவதற்கான இயலுமை தூதரகத்திற்கு இல்லையென கட்டாருக்கான இலங்கை
தூதரகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் அந்த நாட்டின்
சட்டத்திற்கமைய நன்னடத்தையின் பிரகாரம் தண்டனைக் காலம் குறைவடையும் என
தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
சவூதி
அரேபியாவில் ரிசானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதன் பின்னர்
மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களின் நலன் தொடர்பில் கூடிய கவனம்
செலுத்தப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
.
பல்வேறு
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 68 இலங்கையர்கள் கட்டாரில் சிறைத்தண்டனை
அனுபவித்து வருவதாக கட்டாருக்கான இலங்கைத் தூதரகம் தெரிவிக்கின்றது.
இந்த இலங்கையர்களில் நான்கு பெண்கள் அடங்குவதாக தூதரகத்தின் தொழிலாளர் நலன்புரி உத்தியோகத்தர் ஒருவர் உள்ளூர் செய்திச்சேவை ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
ஏனைய 64 ஆண்களில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையின் இளைஞர் ஒருவரும் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே தூதரக அதிகாரிகளிடமிருந்து தமக்கு தேவையான உதவிகள் கிடைப்பதில்லை என கட்டார் மத்திய சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருகின்ற இலங்கையர்கள் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும் இலங்கை கைதிகள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் அதில் தலையிடுவதற்கான இயலுமை தூதரகத்திற்கு இல்லையென கட்டாருக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் அந்த நாட்டின் சட்டத்திற்கமைய நன்னடத்தையின் பிரகாரம் தண்டனைக் காலம் குறைவடையும் என தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபியாவில் ரிசானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களின் நலன் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: