'சிறைச்சாலையிலிருந்து துங்கசிரி என்னுடன் தொலைபேசியில் கதைத்தார். அதன்
ஒலிப்பதிவு என்னிடம் உள்ளது. அவரது தாயார் வெளிநாட்டு வேலை வாய்ப்பு
பணியகத்தில் செய்த முறைப்பாட்டிலும் புத்தரை வழிபட்டதர்காகவே
தனது மகன் சிறையிலடைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.' என ஐ.தே.காவின்
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.சூனியம் செய்து
உள்நாட்டு சட்டத்தை மீறியதோடு இனந்தெரியாத பெண்ணோடு இணைந்து
செயற்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு சவூதியில் ஒரு வருட சிறை மற்றும்
100 கசையடி தண்டனைக்கு உள்ளாகியிருக்கும் துங்கசிறி தொடர்பில் கருத்து
தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர்
மேலும் தெரிவித்துள்ளதாவது,இது தொடர்பில் நான் கதைக்க முன்னர் அமைச்சர்
டிலான் பெரேராவை சந்தித்து கலந்துரையாடினேன். அப்போது பைபிளை வைத்திருந்த
பலரும் அங்கு சிறையில் உள்ளதாக மெல்கம் கர்தினால் தன்னிடம் தெரிவித்ததாக
அவர் கூறினார். அப்படியாயின் சவூதியில் வேறு எந்த ஒரு மதத்தையும் பின்பற்ற
முடியாத சூழலே உள்ளது. இந்த நீதி தொடர்பில் நாம் இங்கிருந்து செல்வோரை
அறிவுறுத்த வேண்டும். அத்துடன் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை எமது
அதிகாரிகள் அந்நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில் தண்டனை
நிறைவேற்றப்படுவது உறுதியே.சவூதியின் நீத்தித்துறை மீது உலகின் எந்த ஒரு
நாட்டுக்கும் துளியளவும் நம்பிக்கை இல்லை. அவர்கள் தமக்கு ஏற்றாப்போல்
சட்டத்தை செயற்படுத்துகின்றனர். துங்கசிறி கைது செய்யப்பட்டது தனது
அறையில் புத்தர் சிலை, வெசாக் கார்ட், எண்ணை மற்றும் பிரித் நூல் ஆகியவற்றை
வைத்திருந்ததனாலேயே. அவர்களது நீதிப்படி அது சூனியமாகக்
கணிக்கப்பட்டுள்ளது என்றார்.முன்னதாக சூனியம் செய்து உள்நாட்டு சட்டத்தை
மீறியதோடு இனந்தெரியாத பெண்ணோடு இணைந்து செயற்பட்டதாகவும் துங்கசிறி மீது
குற்றம் சுமத்தப்பட்டு அவர் உம்முல் ஹம்மாம் மாவட்ட சிறையில்
அடைக்கப்பட்டுள்ளதாக சவூதியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்தது.
அத்துடன் மன்னிப்பு வழங்கப்படுவோர் பட்டியலில் துங்கசிறியின் பெயர்
உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டால் அவர் நாடு
கடத்தப்படுவார் எனவும் தூதரக தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருந்தமையும்
குறிப்பிடத்தக்கது..
புதன், 13 பிப்ரவரி, 2013
0 கருத்துகள்: