ஒசாமா
பின்லாடனை சுட்டுக்கொல்லும் திட்டத்தில் பங்கெடுத்த அமெரிக்க Navy SEAL
குழுவினரில் பின்லாடனை நேருக்கு நேர் நின்று சுட்டுக்கொன்ற இராணுவ வீரர்
முதன்முறையாக தனது அனுபவங்களையும், தனது தற்போதைய பரிதாப நிலையையும் ஊடகங்களுக்கு பகிர்ந்துள்ளார்.
ஒசாமாவை அவரது அபோத்பாத் மாளிகையின் மூன்றாம் மாடியில் முதன்முறையாக பார்த்த போது அவர் குழம்பி போயிருந்தார். நினைத்ததை விட உயரமாக இருந்தார். தனது இளம் மனைவியை முன்னிறுத்திவிட்டு அருகில் இருந்த ஏ.கே. 47 ஐ எடுக்க முனைந்தார். மறு தாக்குதல் நடத்துவதை தவிர்ப்பதற்காக அவரை தலையில் சுட்டுக்கொள்வதே என் திட்டம். அதன்படியே தாக்குதல் நடத்தினேன் என குறித்த வீரர் கூறியுள்ளார். எனினும் தாக்குதல் நடத்த அபோத்பாத் மாளிகைக்கு தரையிறங்கிய போது, நாம் வந்த ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன், அதை எதிர்பார்க்கவே இல்லை. உடனடியாக அங்கிருந்த கார் ஒன்றை திருடிக்கொண்டு தலைநகர் இஸ்லாமாபத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதிஷ்டவசமாக மற்றைய ஹெலிகாப்டர் மூலம் மீண்டு வர முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012 கோடை காலத்துடன் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ள குறித்த வீரர் இப்போது சாதாரண பொதுமகனாக தனது மனைவி, குடும்பத்துடன் வாழ்கிறார். ஆனால் அவருக்கு ஓய்வூதியம் அளிக்க அமெரிக்க அரசு மறுத்துவிட்டது. குறைந்தது 20 வருடங்களாவது இராணுவத்தில் நீடித்திருக்க வேண்டுமாம். குறித்த வீரர் கடற்படையை விட்டு 16 வருடங்களில் விலகி விட்டதே இப்போது ஓய்வூதியம் மறுக்கப்படுவதற்கு காரணம்.
இந்நாட்டுக்காக அவர் எவ்வளவோ செய்துவிட்டார். ஆனால், இப்போது அவரை தூசியில் தள்ளிவிட்டார்கள் என அவரது மனைவி கவலை வெளியிட்டுள்ளார். எனக்கு எந்த ஆதரவும் இல்லை. எனது குடும்பம் மட்டுமல்ல, இந்த சமூகத்தில் இருக்கும் ஏனைய குடும்பத்தினரும் உதவி செய்ய மறுத்துவிட்டனர். நான் பேசுவதற்கு கூட இப்போது யாரும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதே போல் குறித்த கடற்படையிலிருந்த மற்றொரு கொமாண்டோவான இவருடைய நண்பரும், இப்போது கவலை வெளியிட்டுள்ளார். நான் சண்டையில் கொல்லப்பட்டிருந்தால் என் குடும்பத்தினருக்கு போதுமான நிதி உதவி கிடைத்திருக்கலாம் என நம்புகிறேன். உண்மையில் சாதாரண பொதுமகன் போல் வாழ்வது மிக அச்சுறுத்தலாக இருக்கிறது. நாங்கள் எதிரியை தேடிப்பிடித்து கொன்றோம். அவ்வளவு தான். அது இப்போதைய எமது சாதாரண வாழ்க்கைக்கு உதவப்போவதில்லை. எம்மால் இந்த மக்களுக்கு இப்போது ஒன்றும் செய்ய முடியாதுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: