சிறிலங்காவின்
இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தால ராஜபக்ச விமான நிலையத்தின் ஊடாக
வரும் மார்ச் 18ம் திகதி தொடக்கம் விமானப் போக்குவரத்து ஆரம்பமாகவுள்ளதாக
ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
எனினும், சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட இந்த விமான நிலையம் ஊடாக சேவை
நடத்த அனைத்துலக நிறுவனங்கள் குறிப்பாக, இந்திய நிறுவனங்கள் ஆர்வம்
காட்டவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் மத்தால சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக விமான சேவைகளை நடத்த சர்வதேச விமான நிறுவனங்கள் அவ்வளவாக ஆர்வம்காட்டவில்லை.
எமிரேட்ஸ், கட்டார் எயர்வேஸ், எடிஹாட், எயர் அரேபியா, சீனாவின் சிசுவான்
எயர்லைன்ஸ், கொரியன் எயர்லைன்ஸ், போன்றன மத்தாலவுக்கு சேவை நடத்த
இணங்கியிருந்தன.
எனினும் அவை உடனடியாக சேவைகளை ஆரம்பிக்கத் தயாராக இல்லை.
இதனால், சிறிலங்கா அரசாங்கம் இந்த நிறுவனங்களுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது.
அதேவேளை, இந்தியாவின் எந்தவொரு விமானசேவை நிறுவனமும், மத்தால விமான நிலையத்தின் ஊடாக சேவையை நடத்த முன்வரவில்லை.
இந்தியாவில் இருந்தே சிறிலங்காவுக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகின்ற
நிலையில், இந்திய விமான நிறுவனங்கள் மத்தால விமான நிலையத்தைப்
புறக்கணிப்பது சிறிலங்கா அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுநாயக்கவுக்கும், இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களுக்கும் இடையில்
எயர் இந்தியா, ஜெட் எயர்வேய்ஸ், ஸ்பைஸ் ஜெட் ஆகிய நிறுவனங்கள் விமானசேவைளை
நடத்தி வருகின்றன.
ஹம்பாந்தோட்டை, மத்தாலவில் 800 ஏக்கர்
பரப்பளவில் புதிய சர்வதேச விமான நிலையத்தின் முதற்கட்ட கட்டுமானப் பணிகளை
சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம் 209 மில்லியன் டொலர் செலவில்
கட்டிமுடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறிலங்காவின்
இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தால ராஜபக்ச விமான நிலையத்தின் ஊடாக
வரும் மார்ச் 18ம் திகதி தொடக்கம் விமானப் போக்குவரத்து ஆரம்பமாகவுள்ளதாக
ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
எனினும், சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட இந்த விமான நிலையம் ஊடாக சேவை நடத்த அனைத்துலக நிறுவனங்கள் குறிப்பாக, இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் மத்தால சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக விமான சேவைகளை நடத்த சர்வதேச விமான நிறுவனங்கள் அவ்வளவாக ஆர்வம்காட்டவில்லை.
எமிரேட்ஸ், கட்டார் எயர்வேஸ், எடிஹாட், எயர் அரேபியா, சீனாவின் சிசுவான் எயர்லைன்ஸ், கொரியன் எயர்லைன்ஸ், போன்றன மத்தாலவுக்கு சேவை நடத்த இணங்கியிருந்தன.
எனினும் அவை உடனடியாக சேவைகளை ஆரம்பிக்கத் தயாராக இல்லை.
இதனால், சிறிலங்கா அரசாங்கம் இந்த நிறுவனங்களுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது.
அதேவேளை, இந்தியாவின் எந்தவொரு விமானசேவை நிறுவனமும், மத்தால விமான நிலையத்தின் ஊடாக சேவையை நடத்த முன்வரவில்லை.
இந்தியாவில் இருந்தே சிறிலங்காவுக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகின்ற நிலையில், இந்திய விமான நிறுவனங்கள் மத்தால விமான நிலையத்தைப் புறக்கணிப்பது சிறிலங்கா அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுநாயக்கவுக்கும், இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களுக்கும் இடையில் எயர் இந்தியா, ஜெட் எயர்வேய்ஸ், ஸ்பைஸ் ஜெட் ஆகிய நிறுவனங்கள் விமானசேவைளை நடத்தி வருகின்றன.
ஹம்பாந்தோட்டை, மத்தாலவில் 800 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச விமான நிலையத்தின் முதற்கட்ட கட்டுமானப் பணிகளை சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம் 209 மில்லியன் டொலர் செலவில் கட்டிமுடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: