ஸ்ரீநகர்:அப்ஸல் குருவை தூக்கிலிட்டதை தொடர்ந்து கஷ்மீர் மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 4 நாளாக தொடருகிறது. சட்டம்-ஒழுங்கை சீராக்க 14 கம்பெனி பி.எஸ்.எஃப் படை வீரர்கள் ஸ்ரீநகருக்கு வந்துள்ளனர். ஜம்முவில் இருந்து 5 கம்பெனி பி.எஸ்.எஃப் படை வீரர்களை வாபஸ் பெற்று ஸ்ரீநகருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் நடந்துவரும் போராட்டத்தில் 3 பேர் பலியானதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், 2 பேர் மரணித்ததாக போலீஸ் கூறுகிறது.

போராட்டத்தின் போது காயமடைந்து ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனையில் மரணித்த உபைத் அஹ்மதின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. உபைதின் மரண சடங்கில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். போராட்டத்தின் போது காணாமல் போன ஸமீர் அஹ்மத் தர்(வயது 16) உடல் ஜலம் நதியில் கண்டெடுக்கப்பட்டது. பாதுகாப்பு படையினரிடமிருந்து தப்பிக்க ஸமீர் நதியில் சாடினார் என்று உள்ளூர் வாசிகள் குற்றம் சாட்டினர். ஆனால், நதியில் மூழ்கி இறந்ததாக போலீஸ் கூறுகிறது.

கான்புராவில் போராட்டக்காரர்களுடன் நடந்த மோதலில் பாரமுல்லா கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட் சுபைர் அஹ்மத் கானுக்கு காயம் ஏற்பட்டது. வடக்கு கஷ்மீரில் பதான், பல்வலன் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் ஊரடங்கு உத்தரவையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் இந்தியாவுக்கு எதிராக முழக்கமிட்டனர். ஜம்மு கஷ்மீர் லிபரேசன் ஃப்ரண்டின்(ஜே.கே.எல்.எஃப்) ஸ்தாபக தலைவரான மக்பூல் பட்டை தூக்கிலிட்டதன் 29-வது ஆண்டு நினைவு தினமான நேற்று மாநிலத்தில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மக்பூல் பட் பிறந்த கிராமத்தில் பெண்களும், குழந்தைகளும் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முக்கிய சாலைகளை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் சுதந்திரத்திற்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பினர். மவ்ஸூமாவில் ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டங்கள் நடந்தன. அதே வேளையில், ஊரடங்கு உத்தரவும், ஊடகங்களுக்கான கட்டுப்பாடும் வெள்ளிக்கிழமை வரை தொடரும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி க்ரேட்டர் கஷ்மீர் கூறுகிறது.

மரணத் தண்டனையை அமல்படுத்திய சனிக்கிழமை முதல் கஷ்மீரில் பத்திரிகைகள் பிரசுரிக்கப்படவில்லை. இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மொபைல் ஃபோன்கள் நிசப்தமாக உள்ளன. கேபிள் சர்வீஸ்களை நிறுத்தியதால் கஷ்மீரில் தேசிய சானல்களும் தெரியவில்லை. ஆனால், பொழுதுபோக்கு, விளையாட்டு சானல்கள் மட்டுமே தெரிகின்றன.

தூது இணையத்தளம் : http://www.thoothuonline.com/

தூது பேஸ்புக் : http://www.facebook.com/ThoothuOnline
"கஷ்மீரில் ஊரடங்கு நீடிக்கிறது: மரணம் 3 ஆக உயர்வு!

12 Feb 2013 

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய

Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts