‘எந்தவொரு பள்ளிவாலும் தாக்கப்படவில்லை’ என்பது பொதுவாக முஸ்லிம்களை பொருத்தமட்டில் சந்தோசமான செய்திதான். அது அப்படி ஆகியிருந்தால். ஆனால், நமது நாட்டு நடப்பை பார்க்கின்ற போது இச்செய்திக்கும் உண்மைக்கும் எவ்வித தொடர்பும் இருப்பதாகத் தெரி யவில்லை.

சில தினங்களுக்கு முன்பு இலங்கைப் பாராளுமன்றத்தில் மூத்த அமைச்சர் ஒருவர் ‘எந்தவொரு பள்ளிவாலும் தாக்கப்படவில்லை’ என்னும் இத்தகைய பொய்யை பகிரங்கமாகக் கூறிய போது ஆளும் தரப்பு முஸ்லிம் தலைமைகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் அதனை மௌன விரதத்தால் மெய்யாக்கியதையும் பார்க்க முடிந்தது. இப்போது ‘சட்டப்படி’யாகச் சொல்லப் போனால் இலங்கையில் எந்தவொரு பள்ளிவாசலும் இற்றைவரை தாக்கப்படவில்லை!

சில வயசானவர்கள் தமது தளர்ந்த கைகளைத் தட்டி நாம் மேலே கூறிய ‘மெய்’க்கு பாராளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் அவர்களுக்கு வயசு போயிட்டு… என்ன சொல்கின்றோம் என்ன செய்கின்றோம் என்பதில் தெளிவில்லை. மனிதனையே கடவுளாக கூறிவிடுமளவுக்கு மன நேய்… அதனால் அவர்களைக் கணக்கெடுக்கத் தேவையில்லை!( சில ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய மூத்தவர்களோடு சபைக்கு வெளியே இருக்கம் ‘வைட் அனட் வைட்’ மூத்தவரும்; இன்னும் சிலரும் திருவாய் மலர்ந்து அருளியதும், அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளும் செயற்பாடுகளும் தான் ‘பொது பல சேனா’வின் வேகத்திற்கு ஊட்டம் கொடுத்ததென்பது வேறு கதை.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கில் முஸ்லிம் ஆயுத படைகளின் அச்சுறுத்தல் பற்றி ‘வைட் அனட் வைட்’ மூத்தவர் அடிப்படையற்ற அறிக்கையொன்றை ஊடகங்களுக்கு கொடுத்ததும் அதனை ‘மொக்கு தனமான அறிக்கை’ என்று கிழக்கின் தலைவர்களில் ஒருவர் மறுத்ததும் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளாகும். இந்நிகழ்வே இன்றைய பொது பல சேனாவுக்கு பாரம்பரிய முஸ்லிம்கள், தீவிரவாத முஸ்லிம்கள் என்ற பகுப்பு சம்பந்தமான ஆரம்பப் பாடத்தை அன்று ஊட்டியது என்பது ஓர் அவதானத்திற்குரிய விடயமாகும்.

அம்மூத்தவர் கொடுத்த அத்தகைய அறிக்கையும் அவ்வறிக்கையை சுமந்த சில ‘‘ஷிர்க்’ கில் கைகோர்த்துள்ள முஸ்லிம் பெயர் தாங்கிகளின் ‘காட்டிக் கொடுப்பு’மே பெரும்பாலும் மொத்த முஸ்லிம்களுக்கெதிராக அணிதிரட்டும் பிரசாரத்தின் கட்டாயத் தேவையை பௌத்த தீவிரவாத ஊடகங்களுக்கு ஏற்படுத்தியிருந்தது.இத்தீவிரவாத ஊடகங்களின் வலிமையான பிரசாரமே இன்று மொத்த முஸ்லிம்களது இருப்பையும் கேள்விக் குறியாக்கி வருகின்றன.பொது பல சேனா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் வீரியம் பெறுவதற்கு வழிவகுத்த வேறு சில காரணங்களும் உள்ளன. அவை விரிவாக ஆராயப்பட வேண்டியனவாகும்.)

பிரதான ஆளும் கட்சியில் வளர்ந்து முதிர்ந்தவரையும் வளர்ந்துகொண்டிருப்பவரையும் உண்மைக்கு குரல் கொடுக்கும் உத்தமர் என்று ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் ‘கட்சியினது நன்மைக்காக’ வாழ்ந்திட்டுப் போனால் போகுது என்ற கட்டாய நிலைப்பாட்டில் உள்ளவர்கள். இவர்களும் மேலே கூறியவர்களின் இயல்பில் கொஞ்சமே வித்தியாசமானவர்கள் என்பதனால் நாம் மேலே கூறிய ‘மெய்’க்கு எதிராக இவர்கள் பேசியிருக்க வேண்டுமென்று பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.ஆனால் முஸ்லிம் என்ற அடையாளத்தை தம் கட்சியில் சுமக்காத இரண்டு முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் என்ற அடையாளத்தை விட்டுக் கொடுக்காது சுமந்து வரும் ஒரு தனித்தவ கட்சியும் கூட நாம் மேலே கூறிய ‘மெய்’க்கு மொளனமாய் இருந்து சாட்சி பகர்ந்ததை எண்ணிப்பார்க்கின்ற போதுதான் (இவர்கள்மீது) முழு முஸ்லிம் சமூகத்திற்கும் வெட்கமும் வெறுப்பும் ஏற்படுகிறது.ஈமானியப் பண்புகளில் முதன்மையான உண்மை பேசுதல்; பொய்யை மறுத்தல், அதற்காக குரல் கொடுத்தல் ஆகியவற்றில் எதுவுமே இல்லாத இவர்களை எப்படி முஸ்லிம்களின் தலைவர்களாக அல்லது முஸ்லிம் போராளிகளின் ‘தானைத்’ தலைவர்களாகப் பார்க்க முடியும்? ( இவர்கள் அப்பாவி முஸ்லிம்களை தமக்கு வாக்களித்த ஒரே காரணத்திற்காக ‘போராளிகள்’ என்று அழைத்து வருவது பொது பல சேனா உள்ளிட்ட பௌத்த தீவிரவாத இயக்கங்களுக்கு எத்தகைய செய்தியை சொல்லியிருக்கும் என்பது தனித் தலைப்பில் நோக்கப்பட வேண்டியதாகும். )

முஸ்லிம்களிலிருந்து ஏனையவர்களை அடையாளப்படுத்தும் ஒன்றான ஐந்து நேரத் தொழுகையை தொழுவதற்கு பௌத்த தீவிரவாதிகளினால் தொடராக ஏற்படுத்தப்படுகின்ற இடையூறுகளை அல்லது பள்ளிகள் மீதான தாக்குதல்களையாவது உண்மைப்படுத்தி ஓர் வார்த்தையைத் தானும் பேச முடியாத இவர்களை எங்கர் ‘மதார் காக்கா’ இடைக்கிடையே கூறுவது போல ‘ முடும போல வாய பொத்திக்கிட்டு கிடக்கான் டோய்… ’ என்றுதான் கூறத்தோன்றுகிறது.

இருந்த போதும் இதன் பின்பு 2013.02.14ஆம் திகதி வியாழக் கிழமையன்று இடம்பெற்ற ஜனாதிபதி தலைமையிலான சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் முஸ்லிம் கட்சிகளின் மூன்று தலைவர்களும்(அமைச்சர்களும்) மற்றுமொரு மூத்த அமைச்சரும் கலந்து கொண்டு முஸ்லிம்களுக்கெதிரான விடயங்களில் காரசாரமாக -விளக்கமாக பதில் கொடுத்தது முஸ்லிம் உம்மத்தின்; நன்றிகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் உரிய செயலாக அமைந்துள்ளது.(இதேவேளை, முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் சகோதர இனத்தைச் சேர்ந்த தலைமைகளுக்கும் எதிர் கட்சியிலிருந்து தொடர்ந்து போராடிவரும் ஈமானிய நெஞ்சங்களுக்கும் முஸ்லிம் சமூகத்தின் உளப்பூர்வமான நன்றிகள் என்றும் உண்டு)

இதேவழியில் நின்று இந்த ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மாவின் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கு மேலும் ஏதாவது உருப்படியாக இவர்கள் செய்யமாட்டார்களா என்ற அதீத நம்பிக்கையுடன் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் தகவல்களில் சிலவற்றை இங்கு மீளவும் கூறிவைக்கின்றேன்.

கடந்த 15 மாதங்களில் மட்டும் குறைந்தது 10ற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் ஒரு பள்ளிவால் பகுதியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதோடு மற்றுமொரு பள்ளிவாசல் பகுதியளவில் தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளது. அத்தோடு, பழமைவாய்ந்த ஞாபக சின்னமாக விளங்கிய ஸியாரம் ஒன்றும் முழுமையாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.மேலும் பல பள்ளிவாசல்களில் பல நேரத் தொழுகைகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு ஓரிரு பள்ளிவாசல்களில் ஐந்து நேரத் தொழுகையிலும் ஈடுபடமுடியாத அவல நிலைமையும் உள்ளது.பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் அல்லது தாக்குதல் முயற்சி அல்லது அச்சுறுத்தல் சம்பந்தமான சில தகவல்கள் இதோ…(மேலும் சில தகவல்கள் இதில் அடங்க வில்லை.)

01. 2011செப்டம்பர்: அநுராதபுரம் மாவட்டம்,ஒட்டுப்பள்ளம் பகுதியிலிருந்த பல நூற்றாண்டு பலமைவாய்ந்த முஸ்லிம்களுக்கச் சொந்தமான இஸ்லாமிய பெரியாரின் அடக்கஸ்தலம் உள்ளிட்ட நினைவு சின்னங்கள் பொலிஸாரின் பாதுகாப்புடன் பௌத்த மதகுருமார்களின் தலைமையில் இடித்து தகர்க்கப்பட்டது.

02. 2012 எப்ரல் 20: மாத்தளை மாவட்டம், தம்புள்ள நகரில் அமைந்துள்ள ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் தாக்குதலுக்கு உள்ளானது. தம்புள்ள ரங்கிரி ரஜமகா விகாரையின் தலைமை மதகுரு இனாமலுவ சுமங்கள தேரரின் தலைமையிலான குழுவொன்று பேரணியாக வந்து இத்தாக்குதலை நடத்தியது.

03. 2012 மே 25: கொழும்பு மாவட்டம், தெஹிவளை கல்விஹாரை வீதியில் உள்ள தாருர் ரஹ்மான் பள்ளிவாசலை அகற்றுமாறு கோரி பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு பள்ளிவாசலை தாக்கும் முயற்சியும் மேற் கொள்ளப்பட்டது.

04. 2012 மே 28 : குருநாகல் மாவட்டம், ஆரிய சிங்களவத்தையில் அமைந்துள்ள உமர் இப்னு கத்தாப் குர்ஆன் மதரஸாவில் தொழுகை நடத்துவதை நிறுத்துமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு அங்கு தொழுகை நடத்துவது நிறுத்தப்பட்டது,

05. 2012 ஜுலை 24: குருநாகல் மாவட்டம், தெதுரு ஓயாகம தாருல் அக்ரம் தக்கியாவில் இரவு நேரத் தொழுகையை நிறுத்துமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு தொழுகை நடத்தவது நிறுத்தப்பட்டது.

06. 2012 ஜுலை 26: கொழும்பு மாவட்டம், தெஹிவளை பீரிஸ் மாவத்தையிலுள்ள தாருல் அக்ரம் குர்ஆன் மத்ரஸாவில் தொழுகை நடாத்தவதை அரசாங்கம் உத்தியோக பூர்வமாக நிறுத்தியது.

07. 2012 ஜுலை 29: கொழும்பு மாவட்டம், ராஜகரிய ஒபே சேகரபுரயிலுள்ள ஜாமிஉத் தாருல் ஈமான் பள்ளிவாசலில் இரவு நேரத் தொழுகை நடாத்துவதற்கு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு அங்கு தொழுகை நடத்துவது நிறுத்தப்பட்டது,

08. 2012 ஆகஸ்ட் 30: கொழும்பு மாவட்டம், வெல்லம்பிட்டி ,கொகிலா வத்தை பள்ளிவாசலினுள் நுழைந்த சில பௌத்தர்கள் பள்ளிவாசலை தாக்கப் போவதாக எச்சரித்தனர்.

09. 2012 ஒக்டோபர் 27: அநுராதபுரம் மாவட்டம், மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசலுக்கு பௌத்த தீவிர வாதிகளினால் தீவைக்கப்பட்டது.

10. 2012 நவம்பர் 30: கொழும்பு மாவட்டம்,மஹரகம நாவின்ன ரஜமகா விகாரையில் முஸ்லிம்களுக்கு எதிரான பேரணியொன்று இடம்பெற்றது.கிழக்கில் முஸ்லிம் தீவிர வாதிகளினால் பௌத்த மரபுச் சின்னங்கள் அழிக்கப்படுவதாகக் கூறியே இப்பேரணி இடம்பெற்றது.

11. 2012 டிசம்பர் 03: கண்டி மாவட்டம், குண்டகசாலை விவசாய கல்லூரி யில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு பன்றி இறைச்சி கறி பரிமாறப்பட்டது.

12. 2012 டிசம்பர் 08: கண்டி மாவட்டம்,கண்டி மாநகரத்தில் முஸ்லிம் வியாபாரிகளுக் கெதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதோடு கைபேசிகள் வழியாக குறுங் செய்திகளும் அனுப்பப் பட்டன.

13. 2012 டிசம்பர் 23,24: இரத்தினபுர மாவட்டம், எம்பிலிபிட்டியவில் இரு முஸ்லிம் வர்த்தகர்கள் பௌத்த தீவிர வாதிகளினால் தாக்கப்பட்டனர். அதே இடத்தில் 24ஆம் திகதி முஸ்லிம்களுக்கெதிராக ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.

14. 2012 டிசம்பர் 24: பதுளை மாவட்டம்,மஹியங்கனையில் அமைந்தள்ள பள்ளிவாசலை மீள் நிர்மாணம் செய்ய வேண்டாம் என்று பௌத்த தீவிர வாதிகளினால் சுவரொட்டி ஒட்டப்பட்டதோடு துண்டுப் பிரசுரமும் வெளியீடு செய்யப்பட்டது.

15. 2013 ஜனவரி 07: அநுராதபுரம் மாவட்டம், மல்வத்து ஓயா லேனில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் முஸ்லிம்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்பாட்டம் செய்யப்பட்டது.

16. 2013 ஜனவரி 07: கொழும்பு மாவட்டம், சட்டக் கல்லுhpக்கு தெரிவான முஸ்லிம் மாணவர்கள் தொடர்பில் கொழும்பு சட்டக்கல்லூரி க்கு முன்னாள் ஆர்பாட்டம் பௌத்த மதகுருமார்களின் தலைமையில் இடம்பெற்றது.

17. 2013 ஜனவரி 19: கொழும்பு மாவட்டம், மஹரகம நகரில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான ‘நோலிமிட்’ வர்த்தக நிலையத்தை மூடுமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. அதனை தாக்கி அழிப்பதற்கும் முயற்சி மேற் கொள்ளப்பட்டது.

18. 2013 ஜனவரி 20: அநுராதபுர மாவட்டம், புதிய நகரத்தில் முஸ்லிம்களுக்கெதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதோடு,துண்டுப்பிசுரமும் வெளியிடப்பட்டது. முஸ்லிம் ஹோட்டல்களில் சிங்களவர்களக்கென தயாரிக்கப்படுகின்ற உணவுகளில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் இரசாயனம் சேர்க்கப்படுவதாகவும் ஆதலினால் முஸ்லிம் ஹோட்டல்களில் உணவருந்துவதை அவசியம் நிறுத்துமாறும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

19. 2013 ஜனவரி 22: கொழும்பு, புதிதாக நிர்மாணிக்கப்படும் அனைத்துப் பள்ளிவாசல்களும் ஜிஹாதின் பாசறைகளென பொது பலசேனா அமைப்பினால் எச்சரிக்கப்பட்டது.
20. 2013 ஜனவாp 23: களுத்துறை மாவட்டம், பேருவளையில் அமைந்துள்ள முஸ்லிம் ஹோட்டலில் பௌத்த குருமார் தாக்குதலை மேற்கொண்டு சேதப்படுத்தினர்.

21. 2013 ஜனவரி 24: குருநாகல் மாவட்டம், குளியாபிட்டியில் முஸ்லிம்களுக் கெதிரான ஆர்பாட்டம் ஒன்று இடம் பெற்றது. இதன் போது நபிகளாரை கேவலமாக சித்தரித்து எழுதப்பட்டசுலோகங்கள் எடுத்துச் செல்லப்பட்டது.

22. 2013 பெப்ரவரி 01: கண்டி மாவட்டம், கண்டி, சித்தி லெப்பை மாவத்தை ( பெயர் பலகை மைபூசி அழிக்கப்பட்டு) ‘வித்தியார்த்த மாவத்தை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

23. 2013 பெப்ரவரி 07: 2013ஆம் ஆண்டை‘ஹலால்’ ஒழிப்பு ஆண்டாக பிரகடனப் படுத்தியுள்ளதாக பொது பலசேனா அமைப்பு அறிவித்தது. தமது செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுவதற்கு இலங்கை ஜனாதிபதி ஆசிர்வாதம் வழங்கியதாகவும் தெரிவித்தது.

24. 2013 பெப்ரவரி 09: குருநாகல் மாவட்டம், வரக்காபொலயில் பௌத்த மதகுருமார்களின் தலைமையில் முஸ்லிம்களுக்கெதிராக ஆர்பாட்டம் செய்யப்பட்டது.

25. 2013 பெப்ரவரி 10: குருநாகல் மாவட்டம், நாரம்மல, ஹொரம்பாவ பகுதியில் ஸுபஹ் தொழுகைக்காகச் சென்ற ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானது

26. 2013 பெப்ரவரி 11: குருநாகல் மாவட்டம், இரம்புக்கனை பிரதேசத்தில் ‘ஹலால்’ எதிர்ப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

27. 2013 பெப்ரவரி 11: குருநாகல் மாவட்டம், நாரம்மல நகாpலுள்ள முஸ்லிம் வர்த்தகர்களுக்கு ‘பர தம்பியாவுக்கு மார்ச் மாதத்திற்குள் மரணம்’ என்னும் தலைப்பில் அச்சுறுத்தல் கடிம் கிடைக்கப்பெற்றது. இக்கடிதம் பௌத்த அமைப்புக்களின் ஒன்றியம் என்னும் பெயரில் அனுப்பப்பட்டிருந்தது.

28. 2013 பெப்ரவரி 12: கொழும்பு, சிங்கள பௌத்தர்களை ‘இறப்பர் தோட்டத்திலுள்ள’ இறப்பர் மரங்களுக்கும் சிறுபான்மை முஸ்லிம்களை அத்தோட்டத்தில் வளர்க்கப்படும் சிறிய செடிகளுக்கு ஒப்பிட்டு பொது பல சேனா கருத்து தெரிவித்தது.

29. 2013 பெப்ரவரி 13: குருநாகல் மாவட்டம், நாரம்மல பொலிஸ் பிரிவில் சியம்பலா கஸ்கொடுவ, கிளின்பொலயில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு கடைகள் உடைக்கப்பட்டுள்ளன.

30. 2013 பெப்ரவரி 14: கொழும்பு, எதிர்வரும் புத்தாண்டிற்கு முன்பு ‘ஹலால்’ அங்கீகாரம் ஒழிக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் பௌத்த புரட்சி வெடிக்கும் என அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான சம்பிக்க ரணவக்கயினால் எச்சரி க்கை விடுக்கப்பட்டது.

31. 2013 பெப்ரவரி 14: கண்டி மாவட்டம், திகனப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கெதிரான துண்டுப் பிரசுரம் பொது பலசேனா அமைப்பினால் விநியோகிக்கப்பட்டது.

32. 2013 பெப்ரவரி 14: கொழும்பு, சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் முஸ்லிம்கள் சம்பந்தமான முக்கியமான சந்தேகங்களை ஜனாதிபதி வெளியிட்டது.

முஸ்லிம்களின் எதிர்காலம்:

இத்தகவல்களை வைத்துப் பார்க்கின்ற போது முஸ்லிம்கள் இன்று எதிர் நோக்கிவரும் ஆபத்து எத்தகையது என்பது புலனாகும்.பொது பல சேனா அமைப்பானது 2013ஆம் ஆண்டை ‘ஹலால்’ ஒழிப்பு ஆண்டாக பிரகடனப்படுத்தி முஸ்லிம்களுக்கெதிராக சுதந்திரமாக செயற்பட முடியுமாக இருந்தால் அடுத்தடுத்த வருடங்களை அவர்கள் கூறுவது போல் தமக்குத் தேவையான சிலரை மட்டும் பாரம்பரிய முஸ்லிம்கள் என்று பிரகடனப்படுத்தி ஏனையவர்களுக்கு மியன்மாரில்; செய்ததை செய்வதற்கும் எவ்வித தடையும் இருக்காது!எனவே, முஸ்லிம்களை அண்மித்து வரும் அபாயத்தை இல்லாமற் செய்வதற்கு குறைந்தது முஸ்லிம்கள் சம்பந்தமாக அப்பாவி சிங்கள மக்களிடம் திணிக்கப்பட்டுள்ள தப்பான அபிப்பிராயங்களை களையும் வகையில் நாடளாவிய ரீதியில் ஓரு வேலைத்திட்டத்தையாவது முன்னெடுத்துச் செல்வதற்கு உலமாக்களும் ஈமானிய அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் இன்னும் இளைஞர்களும் அவசரமாக முன்வரவேண்டும். அவ்வாறு முன்வருவார்களா?

எந்தவொரு பள்ளிவாலும் தாக்கப்படவில்லை!”என்னும் பொய்யொன்று மெய்யான கதை….

உங்கள் நண்பன் பொலிஸ்

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய

Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts