
விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாக்கிய ராஜா சவுமியா என்ற 12 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிர் உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் தரம் 07ல் கல்வி கற்கும் இம் மாணவி நேற்று விடுமுறை என்பதால் வீட்டு வளையில் சீலையினால் ஊஞ்சல் கட்டி விளையாடியுள்ளார்.
இவர் விளையாடிக் கொண்டு இருக்கும் வேளையில் ஊஞ்சலுக்காக கட்டப்பட்டிருந்த சீலைக்குள் கழுத்து இறுகியதால் இவர் உயிர் இழந்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
மூன்று பிள்ளைகள் உள்ள குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான இவர் சம்பவேளையில் தனிமையில் விளையாடிக் கொண்டு இருந்ததாகவும் தெரிய வருகின்றது.
நேற்று முற்பகல் 12 மணியளவில் நடைபெற்ற இச் சம்பவத்தைத் தொடர்ந்து உயிர் இழந்த இம்மாணவியின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இம் மரணம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்: