
போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த விடியோ ஆதாரங்கள் தற்போது பிரிட்டன் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டு வருகின்றன. இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உலக முழுவதும் வேண்டுகோள் வலுத்து வருகிறது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத்,
’’இலங்கையில் நடந்த கடைசிக் கட்ட போரின் போது, தமிழர்கள் மீது நடந்த வன்முறைகள் தொடர்பாக, சுதந்திரமான உயர்மட்ட அளவிலான ஒரு நம்பகமான விசாரணை நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டும்.
அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையக்கூட்டத்தில், மனித உரிமைகள் மீறிய இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இந்த தீர்மானத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கும் என்று சரியாக சொல்லமுடியாது. இருந்தும் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்’’ என்று கூறினார்.
(நக்கீரன்)
0 கருத்துகள்: