இலங்கையில் முஸ்லிம்களுக்கும் கூட ஹலால் முறைமையை அனுமதிக்கக் கூடாது என்றும் ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமையை நாட்டில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபலசேனா அறிவித்துள்ளது.
கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலேயே பொதுபலசேனா அமைப்பு இதனை அறிவித்துள்ளது.
இலங்கையில் 9 வீதமாக உள்ள முஸ்லிம்களால் பௌத்த மதத்துக்கும், கலாச்சாரத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
தற்போது அமலில் உள்ள ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமை நகைப்புக்குரியது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
பொதுபலசேனா அமைப்பை அரசாங்க அமைச்சர்கள் சிலர் விமர்சிக்கின்ற போதிலும், அந்த அமைப்புக்கு அரசாங்கத்தில் உள்ள ஒருசில தரப்புக்களில் இருந்து ஆதரவு கிடைப்பதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கிடையே கேகாலை மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றின் மீது கல்வீச்சு நடந்ததாகவும் சில செய்திகள் கூறுகின்றன

0 கருத்துகள்: