பெளத்த பேரினவாதம் பேசித்திரியும் பெளத்த பிக்குகள் அடுத்த கட்டத்திற்குத் தயாராகிவிட்டனரா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் அதீத பிரயத்தனத்தால் மூடி மறைக்கப்பட்ட ஆயுத மீட்பு விவகாரம் ஒன்று தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
ரத்னபுர, பனமுர பகுதியில் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையில் பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றதுடன் 37 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக லங்கா – ஈ – நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த ஆயுதத்திற்கும் தனக்கும் தொடர்பில்லை ஆனால் அதனைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் படி விகாராதிபத் ரதுகஹயாய குணரத்ன தம்மிடம் கையளித்ததாக அவர் தெரிவித்திருப்பதாகவும் அறிய முடிகிறது.
தீவிரவாத கொள்கையுடைய குறித்த விகாராதிபதியிடமிருந்து பழமை வாய்ந்த விகாரை காப்பாற்றப்பட வேண்டும் என பிரதேச வாசிகள் கருத்து வெளியிட்டிருக்கும் அதே வேளை, குறித்த சம்பவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அதுரேலியவிற்கும் சம்பந்தமிருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 02ம் திகதி குறித்த நபர்கள் இப்பகுதியில் பயிற்சி முகாம் ஒன்றை மேற்கொண்டதாகவும் தகவலறிந்து கடமையாற்ற முனைந்த பொலிஸார் கூட தடுக்கப்பட்டதாகவும் இவ்விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் தலையீடு இருப்பதாகவும் இத்தகவல் தெரிவிக்கிறது. குறித்த தேடுதலின் போது T56 ரக துப்பாக்கி, கிரனைட் மறறும் பல்வேறு வகை துப்பாக்கி ரவைகளும், வெடி மருந்துகளும் கைப்பற்றப்பட்டதாக அறிய முடிகிறது.

0 கருத்துகள்: