ஹலால் சான்றிதழ் உள்ள பொருட்கள் ஹலால் சான்றிதழ் அற்ற பொருட்கள் என பிரிப்பதால் மட்டும் ஹலால் தொடர்பில்
ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்க்க முடியாது என பொது பல சேனா
தெரிவித்துள்ளது.இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்த அமைப்பின்
செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாவது,ஹலால் சான்றிதழ்
தொடர்பில் இன்னல்களுக்குள்ளான இந்நாட்டின் அனைத்து வியாபாரிகள் தொடர்பிலும்
உலமா சபை பொறுப்பு கூறவேண்டும். குறித்த சான்றிதழுக்காக அறவிடப்பட்ட
கட்டணங்கள் அனைத்தும் வியாபாரிகளுக்கு மீள செலுத்தப்படுவதுடன்
சிங்கள,தமிழ்,முஸ்லிம் பொதுமக்களுக்கும் அவை வழங்கப்படவேண்டும்.
ஹலால்
சான்றிதழானது சட்டவிரோத செயற்பாடாகும். இது தொடர்பில் ஆரம்பத்தில் இருந்து
நடவடிக்கை எடுக்கத்தவறியதால் நுகர்வோர் அதிகாரசபை மற்றும் தர நிர்ணய
நிறுவனங்களும் இதுதொடர்பில் பொறுப்புக் கூற வேண்டும்.இது தொடர்பில்
பொதுமக்களுக்காக குரல் கொடுத்த பொது பல சேனா தலிபான்களாக
சித்தரிக்கப்பட்டது. உலமாக்கள் தமது தராதரம் அறிந்து செயற்படவேண்டும் என
தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: