
பங்களாதேஷில் 1971ம் ஆண்டு காலத்தில் இடம்பெற்ற சுதந்திர போராட்ட யுத்தத்தின் போது மனிதப்படுகொலை மற்றும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இஸ்லாமிய தலைவர் தெல்வார் ஹுசையின் செயீட் 2010ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு இஸ்லாமிய தலைவர் தெல்வார் ஹுசையின் செயீட் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
இஸ்லாமிய தலைவர் தெல்வார் ஹுசையின் செயீட்டுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பங்களாதேஷ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(அத தெரண - தமிழ்)
0 கருத்துகள்: