கண்டி அஸ்கரிய பீட பெளத்த
மதகுருமாருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகளுக்குமிடையிலான
சந்திப்பு நேற்று பிற்பகல் கண்டியில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் கண்டி
அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் கலந்து கொள்வதாக ஏலவே அறிவிக்கப்பட்டிருசந்த
போதிலும் அவரது பிரதிநிதிகள் மாத்திரமே பங்கேற்றனர்.
இதன்போது ஹலால் விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அது தொடர்பான விளக்கங்களும் உலமா சபை பிரதிநிதிகளால் வழங்கப்பட்டன. இச் சந்திப்பில் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி பொதுச் செயலாளர் மெளலவி எம்.எம்.ஏ.முபாரக் மற்றும் பிரதிப் பொதுச் செயலாளர் மெளலவி தாஸிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

0 கருத்துகள்: