அதிக வரதட்சணை கேட்டு, திருமணமாகி ஒரு வருடமேயான மருமகளை ஆசிட் குடிக்கவைத்து கொன்ற மாமியார், நாத்தனார், கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது பற்றிய காவல்துறை செய்திவிவரம் வருமாறு..
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கொடையாஞ்சி கிராமத்தை சேர்ந்த சீனி என்கிற சுதாகருக்கும் (24) ராமநாயக்கன் பேட்டையை சேர்ந்த பி.ஏ. பட்டதாரியான கோமதி (21) க்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமாகி ஒரு வருடம் கழிந்த நிலையில் சுதாகர் தாயார் கூடுதலாக ரூ. இரண்டு இலட்சம் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி கோமதியை கொடுமைபடுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கோமதிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது செல்லும் வழியிலேயே கோமதி பரிதாபமாக இறந்து போனார்.
ஆனால் கோமதி இறப்பதற்கு முன், தன் சித்தியிடம் கணவன், மாமியார், நாத்தனார் ஆகியோர் வலுக்கட்டாயமாக ஒரு பாட்டிலில் இருந்த திராவகத்தை தன்னை குடிக்க வைத்ததாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கோமதியின் தாயார் ரேவதி அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரில் கோமதியை அவரது கணவர், மாமியார், நாத்தானார் ஆகியோர் ஆசிட்டை குடிக்க வைத்து உள்ளனர். எனவே அமிலம் குடிக்கவைத்து கொலை செய்த 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
காவல்துறை மேற்சொன்ன மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

0 கருத்துகள்: