குளியாப்பிட்டியவில் முஸ்லிம்களின் மனதைப்
புண்படுத்தும் விதத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை
நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால்
அரசாங்கம் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று எதிர்க்கட்சித்
தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அறுவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அறுவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
பிட்டகோட்டேயிலுள்ள ஐ.தே.க. தலைமையகமான
ஸ்ரீ கொத்தாவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்
உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனைத்
தெரிவித்தார்.
எதிர்க் கட்சித் தலைவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நாட்டுமக்களை அவர்களது உரிமைகளை
சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். எனவே தற்போது
நாட்டில் தலைதூக்கியுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து அம்
மக்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.
ஹலால் சான்றிதழ் தொடர்பாக முஸ்லிம்கள்
மத்தியில் நிலையான கொள்கையில்லை. இதனை பயன்படுத்தி பொது பலசேனா
முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
ஆனால் இது தொடர்பில் அரசாங்கம் மௌனத்தை
கடைப்பிடித்து வருகின்றது. இவ்வாறானதோர் நிலையில் நான் பொது பலசேனாவின்
தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரருடனும் முஸ்லிம் பிரதிநிதிகளுடனும்
பேச்சுவார்த்தைகளை நடத்தினேன். இதன்போது பொது பலசேனா ஹலாலுக்கு எதிர்ப்பை
வெளியிட்டது. நான் அவர்களிடம் கூறினேன் முஸ்லிம்களுக்கு எதிராக
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாமென கோரிக்கை விடுத்தேன். அதனை
ஏற்றுக்கொண்டார்கள்.
ஆனால் அரசாங்கம் இதுவரையில்
முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுப்பதற்கு ஆக்கபூர்வமான எதனையும்
மேற்கொள்ளவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
- வீரகேசரி
0 கருத்துகள்: