கட்டார் நாட்டின் அரசியல் தலைமையை குறிவைத்து கவிதை எழுதி வெளியிட்ட தொடர்பில் ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டிருந்த முகம்மட் ரஷீட் அல் அஜமி எனும் கட்டார் நாட்டவருக்கு 15 வருடங்களாக தண்டணை குறைக்கப்பட்டிருக்கின்றது.
37 வயதுடைய அஜமி, 4 பிள்ளைகளின் தந்தையாவார். 2010 ஆம் ஆண்டு கெய்ரோவில் படித்துக்கொண்டிருக்கும் போது தனது நண்பர்கள் முன்னிலையில், கட்டார் நாட்டின் அரசியல் தலைமை குறித்து விமர்சித்து எழுதிய தனது கவிதையைக் கூறியிருந்தார்.
இவர் கூறியிருந்த பதிவு செய்யப்பட்ட இக்கவிதை யூ-டியூப் இல் பதிவேற்றப்பட்டிருந்தது. இதன்படி அஜமி 2011, நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனையை நீதி மன்றம் அப்போது விதித்திருந்தது.
எனினும் தனது வழக்கறிஞர்களின் உதவியுடன் மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மேல் முறையீட்டின் பின்னர் அவருக்கான ஆயுள் தண்டணை தற்பொழுது 15 வருடங்களாகக் குறைக்கப்பட்டிருக்கின்றது.
கவிதை வரிகளுக்காக ஓரவருக்கு ஆயுள் தண்டணையா? என உள்ளுர் மற்றும் வெளிநாட்டு பொது அமைப்பினர் அஜமிக்கு குரல் கொடுக்க முன்வந்திருக்கின்றனர்.
ஒரு நாட்டில் இருந்துகொண்டு, தனது நாட்டு தலைமையை பொதுமக்கள் மத்தியில் விமர்சிப்பது தண்டணைக்குரிய குற்றம் எனவும், இதனால் அஜமி தண்டணை அனுபவிப்பதில் எவ்விததத் தவறும் இல்லை என சிரேஷ்ட சட்டத்தரணியான ஜெனரல் மெரி கூறியுள்ளார்.
ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் அரபு கற்கைகளுக்கான பேராசிரியர் ஸ்டீவ் காடன் கூறுகையில்,
‘ஒரு நாட்டின் அரசாங்கத்தை கவிதையால் விமர்சித்த ஒரு கவிஞனுக்கு சிறை தண்டணை என்பது நம்பமுடியாதவை. எனினும் மேற்கைப் பார்க்கிலும் அரபு உலகத்தில் இவ்வாறான அரச எதிர்ப்புகளுக்கு தண்டணைகள் வழங்கப்படுவது தவிர்க்கமுடியாதவை.’ என தெரிவித்திருக்கின்றார்.
ரஷீட் அல் அஜமி கட்டார் நாட்டின் குற்றவியல் சட்டம் 136 இன் படி கைது செய்யப்பட்டு தண்டணைக்குள்ளாக்கப்பட்டிருப்பதாக கட்டார் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
37 வயதுடைய அஜமி, 4 பிள்ளைகளின் தந்தையாவார். 2010 ஆம் ஆண்டு கெய்ரோவில் படித்துக்கொண்டிருக்கும் போது தனது நண்பர்கள் முன்னிலையில், கட்டார் நாட்டின் அரசியல் தலைமை குறித்து விமர்சித்து எழுதிய தனது கவிதையைக் கூறியிருந்தார்.
இவர் கூறியிருந்த பதிவு செய்யப்பட்ட இக்கவிதை யூ-டியூப் இல் பதிவேற்றப்பட்டிருந்தது. இதன்படி அஜமி 2011, நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனையை நீதி மன்றம் அப்போது விதித்திருந்தது.
எனினும் தனது வழக்கறிஞர்களின் உதவியுடன் மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மேல் முறையீட்டின் பின்னர் அவருக்கான ஆயுள் தண்டணை தற்பொழுது 15 வருடங்களாகக் குறைக்கப்பட்டிருக்கின்றது.
கவிதை வரிகளுக்காக ஓரவருக்கு ஆயுள் தண்டணையா? என உள்ளுர் மற்றும் வெளிநாட்டு பொது அமைப்பினர் அஜமிக்கு குரல் கொடுக்க முன்வந்திருக்கின்றனர்.
ஒரு நாட்டில் இருந்துகொண்டு, தனது நாட்டு தலைமையை பொதுமக்கள் மத்தியில் விமர்சிப்பது தண்டணைக்குரிய குற்றம் எனவும், இதனால் அஜமி தண்டணை அனுபவிப்பதில் எவ்விததத் தவறும் இல்லை என சிரேஷ்ட சட்டத்தரணியான ஜெனரல் மெரி கூறியுள்ளார்.
ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் அரபு கற்கைகளுக்கான பேராசிரியர் ஸ்டீவ் காடன் கூறுகையில்,
‘ஒரு நாட்டின் அரசாங்கத்தை கவிதையால் விமர்சித்த ஒரு கவிஞனுக்கு சிறை தண்டணை என்பது நம்பமுடியாதவை. எனினும் மேற்கைப் பார்க்கிலும் அரபு உலகத்தில் இவ்வாறான அரச எதிர்ப்புகளுக்கு தண்டணைகள் வழங்கப்படுவது தவிர்க்கமுடியாதவை.’ என தெரிவித்திருக்கின்றார்.
ரஷீட் அல் அஜமி கட்டார் நாட்டின் குற்றவியல் சட்டம் 136 இன் படி கைது செய்யப்பட்டு தண்டணைக்குள்ளாக்கப்பட்டிருப்பத

0 கருத்துகள்: