முஸ்லிம்
மக்களைத் திட்டமிட்டே சிக்கலுக்குள்ளாக்கியதாகவே எண்ணத் தோன்றும் ஹலால்
விடயத்தில், இப்பிரச்சினை முதன் முதலில் கிளம்பிய போதே, அ.இ.ஜ.உ இது வரை
கூறியது போன்று இது அரசின் அனுமதியுடன் தான் இடம்பெற்றதாக இருந்திருந்தால்,
சமூகத்தையும் சமூகத்துக்கு ஏற்படக்கூடிய அரசியல் சிக்கல்களையும் கருத்திற்
கொண்டு, முதன் முதலில் செய்திருக்க வேண்டிய வேலையை இப்போது செய்திருக்கிறார்கள்.
இத்தனை வேதனைகளையும், சோதனைகளையும் அனுபவித்த பின்னர் மிகவும் தாமதமாகவே இம்முடிவை எட்டியுள்ள ஜம் இயத்துல் உலமா ஆரம்பத்திலேயே அரசியல் விவகாரங்களை தூர நோக்குடன் சிந்தித்து விமர்சனங்களுக்கு அப்பால் பெளத்தவாத நாட்டில் இதனைக் கையாண்டிருக்கலாம் என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாக இருந்து வந்தது.
ஹலால் சான்றிதழை வழங்குவதும் அதன் வருமானமும் குறித்த விடயத்தினை பொது பல சேனா போன்ற தீவிரவாத அமைப்பு கையிலெடுத்ததன் பின்னணியில் எமது பலவீனம் இருக்கத்தான் செய்தது என்பது உணரப்பட வேண்டும். வருமானத்திற்குரிய விடயமாக இது கணிக்கப்பட்டு விட்டதால் இது குறித்த கேள்விகளை பின்னணியில் இருந்து தூண்டி விட்டார்கள் என்பதே உண்மையான விடயமாகும்.
எமது கணக்கு வழக்கு வெளிப்படையாக இருக்கிறது, யார் வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம் என்று இது வரை கூறி வந்த ஜம் இயத்துல் உலமா இன்றைய தினம் பத்திரிகையாளர் மாநாட்டில் வைத்து இது வரை அரசாங்கம் கூட பார்க்கவில்லை என்று தெரிவித்தது இங்கு கவனிக்கப்பட வேண்டும். ஆனாலும் தேசிய விசாரணை பணியகம் (NIB) ஜம் இயத்துல் உலமாவை இரு தடவைகளுக்கு மேலாக விசாரித்திருந்தது.
இந்த விடயங்களை வைத்தும் அதே வேளை ஹலால் சான்றிதழ் வழங்களை (முஸ்லிம்களுக்கு மாத்திரம்) நாம் தொடர்வோம் என இன்று வெளியிடப்பட்டிருக்கும் தகவலையும் வைத்துக் கணிக்கும் போது இவ்விவகாரம் முடிவடைந்ததாகக் கொள்ள முடியாத நிலையிலேயே இன்னும் இருக்கிறது என்பது உணரப்படுகிறது.
ஜெனிவா மாநாடு முடிவடையும் வரை அரசு இந்த விவகாரத்தை ஆறப்போட முயற்சிகள் எடுக்கும் என்பதும் எதிர்பார்க்கப்படும் அதே வேளை, அதன் பின்னராவது அரசு இதில் தலையிட்டு, அமைச்சகப் பிரிவொன்றினால் இவ்விகாரத்தை முன்னெடுப்பதாகவும் அதற்கு ஜம்இயத்துல் உலமாவின் உதவியும் ஒத்தாசையும் வேண்டுமெனவும் அறிவிக்கக்கூடும்.
ஆனாலும் முஸ்லிம் மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பு, ஜம் இயத்துல் உலமாதான் அறிவித்து விட்டதே, நேர்மையான அரசாங்கமாக இருந்தால் உடனடியாக இதற்குப் பதிலளித்து, “இல்லை” ஜம் இயத்துல் உலமா தான் இதைத் தொடர வேண்டும் என்று சொல்லி பெளத்த பேரினாவாத பிக்குகளின் மூக்கை உடைக்குமா என்பதாகும். அது இடம் பெற்றால் வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்பதை சிங்கள வாக்குகளை மட்டும் நம்பியிருக்கும் அரசாங்கம் அறியாமல் இல்லை என்பதால் இவ்விடயத்தினை ஆறப்போடவே முனைவார்கள்.
அதையும் தாண்டி, அவசர அவசரமாக முன்வந்து பொறுப்பினை அரசே எடுக்கும் ஜம் இயத்துல் உலமா விலகிக்கொள்ளலாம் என்று அறிவித்து இக்கட்டான இக்கால கட்டத்தில் முஸ்லிம் நாடுகளின் புருவங்களை உயர்த்துவதற்கு இந்த அரசாங்கம் தயாரில்லை என்பது யாவரும் கணிப்பதே.
அப்படிச் செய்வின், அதுவும் இது வரை ஜம் இயத்துல் உலமாவை ஹலால் சான்றிதழ் வழங்க ஊக்குவித்து வந்ததே அரசாங்கம் தான் எனில் இதை விட ஒரு அவமானத்தை அரசாங்கம் முஸ்லிம் சமூகத்துக்குத் தர முடியாது.
எனவே இது சமூகத்தின் மீது நிர்ப்பந்திக்கப்பட்ட அரசியல் விவகாரமாக ஏற்கனவே மாறி விட்டது சம்பந்தப்பட்டவர்களால் தூர நோக்கோடு எப்போதோ உணரப்பட்டிருக்க வேண்டும். இப்போதாவது உணர்ந்தார்களே எனும் அடிப்படையில் இனி என்ன நடக்கும் என முஸ்லிம்கள் எதிர்பார்க்க ஆரம்பிப்பார்கள். அதற்கிடையில் தமக்கு “வெற்றி” கிடைத்து விட்டதாக இப்போது பொது பல சேனா தகவல் பரப்பவும் கொண்டாடவும் ஆரம்பித்து விட்டது.
தாமதமாகிக் கொண்டே சென்றதால், ஜம் இயத்துல் உலமாவிடம் ஏதோ பிடி இருக்கிறது, எனவே இவ்வாறானதொரு நிலை வராது என்றே எண்ணி சமூக வலைத்தளங்களில் சிங்கள மக்களோடு போட்டி போட்டுக் கொண்ட முஸ்லிம் இளைஞர்களும் தற்போது சிந்திக்கத் தள்ளப்படுவார்கள்.
இதற்கு முன் இலங்கை முஸ்லிம்கள் இவ்வாறனதொரு அனுபவத்தைப் பெற்றதில்லை, இதுவே முதல் தடவை. எனவே, இதன் வாதப்பிரதிவாதங்கள் மற்றும் அனுகூலங்களைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆயினும், முஸ்லிம்கள் அவசரப்படாமல் பொறுமை காப்பதும், வாதங்களைத் தவிர்த்துக் கொள்வதும், எல்லாவற்றிற்கும் மேலாக சமூக அரசியலின் ஒற்றுமையை உணர்ந்து நடப்பதும், நமது குரலை ஒரே குரலாக, இயக்க வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் கலைந்த ஒரே குரலாக ஒலிக்கச் செய்யும் வழி வகைகளையும் ஆராய வேண்டும்.
பொதுபலசேன அமைப்பை நாங்கள் கவனித்திற்கு கொள்ளவில்லை. அந்த அமைப்பினை கவனதிற்கொண்டு இந்த தீர்மானத்தை மேற்கொள்ளவுமில்லை. எனினும் நாட்டில் இன ஒற்றுமை, சமாதானம் சகவாழ்;வு போன்ற செயற்பாடுகளுக்காகவே இந்த தீர்மானத்தினை மேற்கொண்டோம்” என்று ஜம் இயத்துல் உலமா கூறியிருந்தது.
இந்த விவகாரத்தினைப் பேசியதன் மூலமாகவே இங்கு பொதுபல சேனாவின் அழுத்தம் இருந்தது என்பது தெளிவாகிவிட்டது. எனவே, பொது பல சேனா இதை வெற்றியாகக் கொண்டாடுவதும் தவிர்க்கப்பட முடியாததாகி விடுகிறது.
சமூகம் இவ்வாறு அரசியலில் சிக்கித் தத்தளிக்கும் போது பதவிக்காகவும், தமது சுகபோகங்களுக்காகவும் வாய் மூடி மெளனிகளாக இருந்த முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அரச பங்காளிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இனி வரும் காலத்திலாவது அரசியல் விவகாரங்களில் ஜம் இயத்துல் உலமா சிக்காமல் தவிர்ப்பதற்காகவாவது வாய் திறக்க வேண்டும். திறப்பார்களா? என்பதும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முஸ்லிம்களின் வழி காட்டிகள் எனும் நிலைப்பாட்டை எடுத்துள்ள ஜம் இயத்துல் உலமாவும் அதன் வரையறையைத் தெளிவாகப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். அரசியலிலும் முஸ்லிம்களை வழி நடத்துவதுதான் அவர்கள் விருப்பமாக இருந்தால் இவ்வாறான அரசியல் தோல்விகளை எதிர்வரும் காலங்களில் எவ்வாறு தவிர்க்கப்போகிறார்கள் என்பதை அவர்கள் விளக்க வேண்டும் என்பதோடு ஒரு சமூகத்தை கட்சி சார்பற்ற அரசியல் நோக்கி எவ்வாறு வழி நடத்தப்போகிறார்கள் என்பதையும் விளக்க வேண்டும்.
இனி அடுத்தது என்ன என்பது இப்போதைய கேள்வியாக இருக்கப்போகிறது !
- சோனகர் வலைத்தளம்

0 கருத்துகள்: