அரசாங்கத்தில்
அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளே நாட்டில் சட்டத்திற்கு முரணாகவும்
அடாவடித்தனங்களிலும் மக்கள் விரோதச் செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனரென
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத்சாலி தெரிவித்தார்.
கொழும்பு -7 இல் அமைந்துள்ள அசாத் சாலி மன்றத்தில் நேற்று புதன்கிழமை
இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கத்தின் செய்தியாளர்
மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
எமது நாட்டில்
அடாவடித்தனங்கள், சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள் மற்றும் மக்கள் விரோதச்
செயற்பாடுகள் போன்றவற்றில் இன்று முழுக்க முழுக்க ஈடுபடுகின்றவர்கள்
அரசில் அங்கம் வகிக்கும் அரசியல் வாதிகளே.
நாட்டில் சட்டம், நீதி
என்பவை எங்கோ போய்க் கொண்டிருக்கின்றன. பொலிஸ்துறை என்பது கேள்விக்குறியாக
மாறிவிட்டது. எமது நாடு வேடிக்கைக்கு இடமாகியுள்ளது.
இதேவேளை,
முப்பது வருடகால யுத்தம் நிறைவுற்றுள்ள நிலையில் அதற்கான தீர்வை அரசாங்கம்
கொடுக்காமல் உள்ளது. ஆனால், தேவையில்லாத பிரச்சினைகளை எல்லாம் தன்மேல்
தூக்கிப் போட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தில்
அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளே நாட்டில் சட்டத்திற்கு முரணாகவும்
அடாவடித்தனங்களிலும் மக்கள் விரோதச் செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனரென
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத்சாலி தெரிவித்தார்.
கொழும்பு -7 இல் அமைந்துள்ள அசாத் சாலி மன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கத்தின் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
எமது நாட்டில் அடாவடித்தனங்கள், சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள் மற்றும் மக்கள் விரோதச் செயற்பாடுகள் போன்றவற்றில் இன்று முழுக்க முழுக்க ஈடுபடுகின்றவர்கள் அரசில் அங்கம் வகிக்கும் அரசியல் வாதிகளே.
நாட்டில் சட்டம், நீதி என்பவை எங்கோ போய்க் கொண்டிருக்கின்றன. பொலிஸ்துறை என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டது. எமது நாடு வேடிக்கைக்கு இடமாகியுள்ளது.
இதேவேளை, முப்பது வருடகால யுத்தம் நிறைவுற்றுள்ள நிலையில் அதற்கான தீர்வை அரசாங்கம் கொடுக்காமல் உள்ளது. ஆனால், தேவையில்லாத பிரச்சினைகளை எல்லாம் தன்மேல் தூக்கிப் போட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்: