ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள வர்தாக் மற்றும் லோகர் ஆகிய மாகாணங்களிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்கப் படைகள் வெளியேற ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தலைநகர் காபூலில் செய்தியாளர்களிடம் பேசியபோது அதிபர் கர்சாயியின் செய்தித் தொடர்பாளர் அய்மல் பைஜி இவ்வாறு கூறினார்.

இன்று நடைபெற்ற பாதுகாப்புக்குழு கூட்டத்தில், வர்தாக் மற்றும் லோகர் ஆகிய மாகாணங்களிலிருந்து அமெரிக்க சிறப்புப் படையினரை இரண்டு வாரங்களுக்குள் வெளியேற்றுமாறு இராணுவ அமைச்சருக்கு அதிபர் ஹமீத் கர்சாய் உத்தரவிட்டார் என்று அவர் கூறினார்.

வர்தாக் மாகாணத்தில் மாணவன் ஒருவனின் தலையை வெட்டியது மற்றும் 9 ஆப்கானியர்களை அவசியமின்றி பிடித்து வைத்திருந்தது உள்ளிட்ட தவறான செயல்களை அமெரிக்க சிறப்புப் படையினர் செய்ததாக பைஜி கூறினார்.

ஆப்கான் தேசிய பாதுகாப்புக் குழு வெளியிட்ட அறிக்கையில், வர்தாக் மாகாணத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க சிறப்புப் படையைச் சார்ந்த ஆயுதம் ஏந்திய தனி நபர்கள், அப்பாவி பொதுமக்களைத் துன்புறுத்துதால், சித்தரவதை செய்தல் மற்றும் கொலை செய்தல் போன்றவற்றைச் செய்வது தெளிவாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இத்தகைய செயல்கள் உள்ளூர் பொதுமக்களிடையே கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆப்கன் பள்ளி மாணவன் தலையை வெட்டிய அமெரிக்க நாய்களை வெளியேறும்படி உத்தரவிட்ட ஹமீத் கர்சாய்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள வர்தாக் மற்றும் லோகர் ஆகிய மாகாணங்களிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்கப் படைகள் வெளியேற ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக தலைநகர் காபூலில் செய்தியாளர்களிடம் பேசியபோது அதிபர் கர்சாயியின் செய்தித் தொடர்பாளர் அய்மல் பைஜி இவ்வாறு கூறினார்.

இன்று நடைபெற்ற பாதுகாப்புக்குழு கூட்டத்தில், வர்தாக் மற்றும் லோகர் ஆகிய மாகாணங்களிலிருந்து அமெரிக்க சிறப்புப் படையினரை இரண்டு வாரங்களுக்குள் வெளியேற்றுமாறு இராணுவ அமைச்சருக்கு அதிபர் ஹமீத் கர்சாய் உத்தரவிட்டார் என்று அவர் கூறினார்.

வர்தாக் மாகாணத்தில் மாணவன் ஒருவனின் தலையை வெட்டியது மற்றும் 9 ஆப்கானியர்களை அவசியமின்றி பிடித்து வைத்திருந்தது உள்ளிட்ட தவறான செயல்களை அமெரிக்க சிறப்புப் படையினர் செய்ததாக பைஜி கூறினார்.

ஆப்கான் தேசிய பாதுகாப்புக் குழு வெளியிட்ட அறிக்கையில், வர்தாக் மாகாணத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க சிறப்புப் படையைச் சார்ந்த ஆயுதம் ஏந்திய தனி நபர்கள், அப்பாவி பொதுமக்களைத் துன்புறுத்துதால், சித்தரவதை செய்தல் மற்றும் கொலை செய்தல் போன்றவற்றைச் செய்வது தெளிவாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இத்தகைய செயல்கள் உள்ளூர் பொதுமக்களிடையே கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- இந்நேரம் - இந்நேரம்

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய

Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts