ஜெர்மனி நாட்டை சேர்ந்த இளம்பெண் 6 கிலோ எடையுள்ள பெண் குழந்தையை ஆபரேஷன் ஏதுமின்றி சுகப்பிரசவ முறையில் ஈன்றெடுத்தார்.
அதிக எடை கொண்ட குழந்தையை பிரசவிக்க வேண்டும் என்றால் 'சிசேரியன்' ஆபரேஷனை
தான் டாக்டர்கள் தேர்வு செய்வார்கள். ஆனால், ஆபரேஷன் செய்துக்கொள்ள
விரும்பாத அந்த இளம்பெண் கடந்த சனிக்கிழமை இயல்பான முறையில் 13 1/2 பவுண்ட்
(6 கிலோ 110 கிராம்) எடையுள்ள குழந்தையை பிரசவித்தார். பிறந்த போது அதிக எடை கொண்ட குழந்தையாக ஜெர்மானியர் இதை கருதுகின்றனர்.
இதற்கு முன்னதாக 2011ம் ஆண்டு பெர்லினில் 13 பவுண்ட் எடையுடன் பிறந்த ஆண்
குழந்தை தான் அதிக எடை கொண்டதாக கருதப்பட்டது. அந்த சாதனையை தற்போது
பிறந்துள்ள ஜஸ்வீன் என்ற இந்த பெண் குழந்தை முறியடித்து விட்டது.
0 கருத்துகள்: