சிங்கள பௌத்த நாடான இலங்கையில் வந்தேறு குடிகளான முஸ்லிம்களுக்கு தனியானதொரு சட்டம் இருக்கக் கூடாதென பொதுபல சேனா தெரிவித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை மஹியங்கனை பகுதியில் பொதுபலசேனாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த பொதுபலசேனாவின் பிரதான செயலாளர் கலபொட ஹத்தே ஞானசார தேரர் மேலும் கூறியுள்ளதாவது,
உலக வரைபடத்தில் கண்ணுக்கு புலப்படாத அளவில் காணப்படும் இலங்கையில் வந்தேறுகுடிகள் இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டு தமக்கு ஏற்றவாறு சட்டங்களை அமைத்துக் கொண்டுள்ளனர். இது சிங்கள பௌத்த நாடு. வந்தேறு குடிகளான முஸ்லிம்களுக்கு தனியானதொரு சட்டம் இருக்கக்கூடாது. அவ்வாறு இஸ்லாமியச் சட்டங்களை சவூதியில் முஸ்லிம்கள் அனுபவிக்கலாம்.
தற்போது இலங்கையில் தேசப்பற்றுள்ள முஸ்லிம்களை மனங்களை மாற்றி வஹாபிசம் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. அதனால் நாளுக்கு நாள் முஸ்லிம் பள்ளிவாசல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வஹாபிசம் , சலாபிசம் போன்ற தீவிரவாத கொள்கைகளைப் பின்பற்றும் சில முஸ்லிம் அமைப்புகள் ஷரியா சட்டம் , ஹலால் சான்றிதழ் என பல்வேறுபட்ட விடயங்களை புதிதாக சமூகத்திற்குள் புகுத்தி , இலங்கையின் கலாசாரம் மற்றும் மரபினைச் சிதைக்க முற்படுகின்றனர். உள்நாட்டு உற்பத்திப் பொருட்களில் ஹாலால் சான்றிதழுடன் பொருட்கள் வெளியிடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆதனால் ஹலால் இலச்சினை பொறிக்கப்பட்ட உணவுகளை நுகரக் கூடாது.

0 கருத்துகள்: