இறுதிநாள்
வரும்வரைக்கும் சவூதியிலுள்ள இரு புனிதஸ்தலங்களுக்குமான அபிவிருத்திகள்
நிறுத்தப்படாமல் வரையறையன்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதீனா- மஸ்ஜிதுன்
நபவி ஹரம் பள்ளிவாயலில் உம்ரா, ஹஜ் யாத்திரிகளைக் கட்டுப்படுத்த
முடியுமெனினும் கஃபதுல்லாஹ்வில் யாத்திரிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை
வருடாந்தம் அங்கும் இடம்பெற்று வருகின்றன.
புனித மக்கா ஹரம்
பள்ளிவாயலுக்குள் உலகம் அழியும்வரைக்கும் தவாபு இடம்பெற்றுக்கொண்டே
இருக்கும். எனினும் ஹஜ், மற்றும் ரமழான் காலங்களில் ஏற்படும்
யாத்திரிகர்களின் எல்லையற்ற வருகையாளும், உள்ளுர் யாத்திரிகர்களின்
உள்நுழைவாளும் பிரமாண்டமான சனத்திரளை பல பகுதிகளாகப் பிரித்து,
வணக்கங்களுக்கு வழிவகுத்தாலும், அவற்றை கட்டுப்படுத்த முடியாத நிலை
ஏற்படுகின்றன.
இதன்
காரணமாக, மலைக்குண்றுகளால் சூழப்பட்ட கஃபதுல்லாஹ், இன்று மக்கா நகரின்
அரைவாசியை இலக்குவைத்து பாரிய, பிரமாண்டமான அபிவிருத்தியின் பால்
நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
ஒவ்வொரு வருடமும் ஏதாவது மாற்றம் மக்கா ஹரத்தில் நிகழும். பழைய மக்கா ஹரம்
கி.பி. 1900 காலப்பகுதிகளின் பின்னர் அபிவிருத்திக்காக சில முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் 1960களில் கஃபாவைச் சூழவுள்ள பிரமாண்டமான
பள்ளிவாயலுக்கான கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அவை 1980களில்
ஓரளவு நிறைவுக்கு வந்த போதிலும், 1990களின் பிற்பாடு நவீன அபிவிருத்தியில்
பற்பல புதிய கட்டுமான உத்திகளைக் கொண்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வந்தது.
ஆனால் 2020களின் பின்னர் கஃபா பின்வரும் படங்களில் இருப்பது போல்
காட்சியளிக்கும் எனவும், யாத்திரிகளுக்கு சிரமங்கள், நேர விரயங்கள்
இருக்காது எனவும், அங்கவீனர்களும், வயோதிபர்களும் இலகுவாக ஹரத்தை தரிசிக்க
முடியும் எனவும் மக்கா ஹரம் அபிவிருத்தி குழுத் தலைமை
தெரிவித்திருக்கின்றது.
என்னதான் இத்தகைய படங்கள் ஓர் புதிய
காட்சியை (Look) எங்களுக்கு காண்பித்தாலும் இன்னும் இதைவிட நவீன
சிந்தனையாளர்களின் புதிய அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் மஸ்ஜிதுல் ஹரம்
மேலும் உடைக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் அபிவிருத்தியை நோக்கி
சென்றுகொண்டிருக்கும்.
சவுதி அரேபியாவைப் பொருத்தமட்டடில், அங்கு
100 மாடிகள் கட்டவேண்டும், கோபுரங்கள் அமைக்க வேண்டும், நட்சத்திர
விடுதிகளும், கடற்கரைகளும் அமைத்து உல்லாசப் பிரயாணிகளைக் கவர
வேண்டுமென்பது நோக்கமல்ல!
இஸ்லாம் உருவான பூமியில் இரு ஹரம்
பள்ளிவாயல்களே சவூதி அரசாங்கத்தின் சொத்துக்கள். கிடைக்கும் வருமானத்தை
இவ்விரு பள்ளிவாயல்களுக்கும், அள்ளி-அள்ளி வாரி வழங்குகிறது சவூதி அரசு.
கோடான கோடி சவூதி ரியால்களில் அபிவிருத்தி செய்யப்படும் புனித ஹரம்
திட்டம், எதிர்காலத்தில் யாத்திரிகளுக்கு நிச்சயம் பயணளித்து ஆறுதலளிக்கும்
என்பது மகிழ்ச்சிக்குரியது.
ஒவ்வொரு வருடமும் ஏதாவது மாற்றம் மக்கா ஹரத்தில் நிகழும். பழைய மக்கா ஹரம் கி.பி. 1900 காலப்பகுதிகளின் பின்னர் அபிவிருத்திக்காக சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் 1960களில் கஃபாவைச் சூழவுள்ள பிரமாண்டமான பள்ளிவாயலுக்கான கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அவை 1980களில் ஓரளவு நிறைவுக்கு வந்த போதிலும், 1990களின் பிற்பாடு நவீன அபிவிருத்தியில் பற்பல புதிய கட்டுமான உத்திகளைக் கொண்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வந்தது.
ஆனால் 2020களின் பின்னர் கஃபா பின்வரும் படங்களில் இருப்பது போல் காட்சியளிக்கும் எனவும், யாத்திரிகளுக்கு சிரமங்கள், நேர விரயங்கள் இருக்காது எனவும், அங்கவீனர்களும், வயோதிபர்களும் இலகுவாக ஹரத்தை தரிசிக்க முடியும் எனவும் மக்கா ஹரம் அபிவிருத்தி குழுத் தலைமை தெரிவித்திருக்கின்றது.
என்னதான் இத்தகைய படங்கள் ஓர் புதிய காட்சியை (Look) எங்களுக்கு காண்பித்தாலும் இன்னும் இதைவிட நவீன சிந்தனையாளர்களின் புதிய அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் மஸ்ஜிதுல் ஹரம் மேலும் உடைக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் அபிவிருத்தியை நோக்கி சென்றுகொண்டிருக்கும்.
சவுதி அரேபியாவைப் பொருத்தமட்டடில், அங்கு 100 மாடிகள் கட்டவேண்டும், கோபுரங்கள் அமைக்க வேண்டும், நட்சத்திர விடுதிகளும், கடற்கரைகளும் அமைத்து உல்லாசப் பிரயாணிகளைக் கவர வேண்டுமென்பது நோக்கமல்ல!
இஸ்லாம் உருவான பூமியில் இரு ஹரம் பள்ளிவாயல்களே சவூதி அரசாங்கத்தின் சொத்துக்கள். கிடைக்கும் வருமானத்தை இவ்விரு பள்ளிவாயல்களுக்கும், அள்ளி-அள்ளி வாரி வழங்குகிறது சவூதி அரசு.
கோடான கோடி சவூதி ரியால்களில் அபிவிருத்தி செய்யப்படும் புனித ஹரம் திட்டம், எதிர்காலத்தில் யாத்திரிகளுக்கு நிச்சயம் பயணளித்து ஆறுதலளிக்கும் என்பது மகிழ்ச்சிக்குரியது.
0 கருத்துகள்: