மஹியங்கனையில் தொழுகை நடத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படும் இடமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பள்ளிவாசலாகப் பயன்படுத்தப்படவில்லை எனவும்,
அது வியாபார நடவடிக்கைகளுக்காக தன்னால் பதிவு செய்யப்பட்ட தனது வர்த்தக நிலையம் எனவும் அதன் உரிமையாளர் மத விவகார அமைச்சரும் பிரதமருமான தி. மு. ஜயரத்ன விற்கு கடிதம் மூல மாக அறிவித்துள்ளார்.

இதன் மூலமாக இந்த விவகாரம் முடிவிற்கு வந்துள்ளது. இனிமேலும் இவ்விடயத்தை பெரிதுபடுத்தி எவரும் சர்ச்சைகளைத் தோற்றுவிக்கத் தேவையில்லை என அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் எழுதிய கடிதத்தின் விபரம் வருமாறு :-



24.07.2013
கெளரவ பிரதமர்
டி. எம். ஜயரத்ன அவர்கள்
புத்தசாசன, மத அலுவல்கள் அமைச்சு
இல. 115, விஜேராம மாவத்தை
கொழும்பு 07.

மஹியங்கனை நகர முஸ்லிம் பள்ளிவாசல் தொடர்பானது
மேற்படி முகவரியில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நான், 17 ஆம் இலக்கம் கொண்ட ரன்முத்து கோல்ட் ஹவுஸ் எனும் பெயரில் தங்க நகை விற்பனை நிறுவனமொன்றை கடந்த 15 – 20 வருட காலமாக மஹியங்கனை நகரத்தில் நடத்தி வருகின்றேன். மஹியங்கனை பிரதேச சிங்கள பெளத்த மக்களுடன் சகோதரத்துவத்தோடு வாழ்ந்து வருகின்றேன். எனது வியாபார நிறுவனம் மஹியங்கனை பிரதேச சபையிடமிருந்து பெறப்பட்ட வியாபார அனுமதிப் பத்திரத்தின் கீழ் நடத்தப்படுகின்ற வியாபார நிறுவனமாகும்.

இந்த இடத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் பள்ளிவாசலாக பதிவு செய்யவோ அல்லது பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவோ இல்லை என்பதையும் எனது இந்த வியாபார நிறுவனத்தில் எமது குடும்பத்தின் பிள்ளைகள் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டபோதும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இதனை முஸ்லிம் பள்ளிவாசலாகப் பயன்படுத்தவில்லை என்பதை இத்தால் சத்தியம் செய்து உறுதிப்படுத்துகின்றேன்.
நன்றி
இங்ஙனம் நம்பிக்கையுள்ள

17 பி, கண்டி வீதி, மஹியங்கனை. தொலைபேசி : 055 57273
Bookmark and Share

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts