1990-08-03
காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலைக்குப் பின்னர் 1991 இல் இருந்து கடந்த
வருடம்வரை வருடாந்தம் குறித்த தினத்தில் நினைவுகூர்ந்து வந்த ‘சுஹதாக்கள்
தினம்’ இவ்வருடம், நாளை மறுதினம் அதாவது சனிக்கிழமையாகும்.
ரமழானின் கடைசி வாரத்தில் மக்கள் நல்லமல்களில் ஒருபக்கமும், வியாபாரிகள்
இன்னுமொரு பக்கமும், இதற்கிடையில் பெருநாள் உடுப்புக்களைக் கொள்வனவு
செய்வதில் பொதுமக்கள் இன்னுமொரு பக்கமும், ஸதகா, ஸகாத் என ஹதியாவுக்காக
அழையும் வீதியோர யாசகர்கள் மற்றுமொரு பக்கத்திலும் …. இவ்வாறு காலை
தொடக்கம் நள்ளிவைத்தாண்டியும் சுறு-சுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்
காத்தான்குடி நகரம், இம்முறை சுஹதாக்கள் தினத்தை எந்தளவில் நினைவு கூறும்
என்பதில் பல சிக்கல்கள் எழுந்து வருகின்றன.
மார்க்கக்கடமைகளை உரிய
பள்ளிவாயல்களில் வழமை போன்று ஒழுங்கு செய்து ஓர் நினைவுரையை நிகழ்த்தினால்
போதுமானது எனவும், வர்த்தக நிலையங்களை மூடாது இயல்பான நிலையைக்
கடைப்பிடிக்குமாறும், இப்தார் ஏற்பாடுகளை இரு பள்ளவாயல்களில் ஒழுங்கு
செய்து சுஹதாக்கள் தினத்தை நினைவு கூறுமாறும் பல தரப்புக்கள்
கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன.
இதுபற்றிய மேலிதக விபரங்கள் விரைவில் பதிவேற்றப்படும்
0 கருத்துகள்: